பக்கம்:பாட்டுத் திறன்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் శిః 'கால்களால் கடந்த கதை' என்ற தலைப்பில் காணப் பெறும் மற்றொரு கவிதை கண்ணகியின் கதையைப் புதிய கோணத்தில் காட்டி கம்மைச் சிந்திக்க வைக்கின்றது. இதில் சிலபகுதிகள்: பால்கிறைந்து கணக்க வேண்டிய பாவையின் மார்பகம் வரப்பிலாக் கன்ன வாய்க்கால் வழியே புரண்டோடிச் சங்கமித்த கண்ணிர்ச் சுமையால் மட்டுமே கனத்துக் கிடங்தது உருகிச் சுகம்பெறா உடல் அழகைத் தன்கையால் திருகி எறிந்தாள்-தீவிட்டாள்மழலைக் குழந்தைக்குப் பாலூட்டாத மார்பு மதுரைக் குழந்தைக்குப் பாலூட்டியது உவப்புப்பால் அல்ல சிவப்புப் பால் பத்தினி நெருப்பு பற்றிக் கொண்டது சிலப்பதிகாரம் சிவப்பதிகாரம் ஆனது. இவ்வாறு சிலப்பதிகாரக் கதையைத் தற்காலச் சூழ்நிலைகளுக் கேற்ப உணர்ச்சி பீறிடக் கூறிய கவிஞர் ஒரு திருப்பத்தை உண்டாக்குகின்றார். புதிய சிலப்பதிகாரம் ஒன்று தோன்றப் போவதைக் காட்டுகின்றார். இங்கேயும்இன்னும்இப்போதும் - ஒவ்வொரு பொண்ணும் சிலம்பை உடைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். காலிலிருந்தல்ல-கண்ணிலிருந்து. பரல்களின் நீர்த்தெளிப்பை நீங்கள் பார்த்ததில்லையா?-அந்தக் கண்மணி'களின் கண்ணிர் மணிகளை நீங்கள் கண்டதில்லையா? 17. ஊர்வலம் பக் (80-87)