பக்கம்:பாட்டுத் திறன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பகுதி: உணர்ச்சியின் தத்துவம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த உறவு கன்முறையில் இருந்தால்தான் கல்லுணர்வுகள் தோன்றும். அப்பொழுதுதான் கவிதை யின் உயிர் காடியாகவுள்ள கவிதை யுணர்ச்சியை நாம் பெறுதல் இயலும். நம்முடைய உடலிலுள்ள தாம் பிலாச்சுரப்பிகளும் தன்னாட்சி நரம்புமண்டலமும் நம்மிடம் உணர்ச்சிகள் எழுவதற்கு கிலைக்களன்களாக உள்ளன; இவை கன்முறையில் இயங்குவதனாலேயே உணர்ச்சிகளும் நன்முறையில் தோன்றுகின்றன. இடை மூளையிலுள்ள மேற்பூத்தண்டு என்ற பகுதியே இவற்றைச் சரிவர இயக்குவதில் முக்கிய பங்கு பெறு கின்றது. உணர்ச்சிகள் திரண்டு அமையும் பல்வேறு மேலீடான மன உணர்ச்சிகளும் மீப்பண்புகளும் பல் வேறுவகைக் கவிதைகளைப் படிப்பதற்குக் காரணங் களாக அமைகின்றன. உளவியலார் உணர்ச்சிகளைப் பற்றிய பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ளனர். கவிதை அதுபவமாகும் முறையில் ஆறு படிகள் உள்ளன. உளவியலார் கூறும் உணர்ச்சிகளையே, பண்டைத் தமிழர்கள், மெய்ப்பாடுகள் எனப் பாகு படுத்தியுள்ளனர். உளவியலார் கூறும் நுட்பங்கள் தொல்காப்பியத்திலும் உள்ளன. இவற்றையும் இவை போன்ற செய்திகளையும் இப்பகுதி ஒரளவு விரித் துரைக்கின்றது. uf.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/45&oldid=813009" இலிருந்து மீள்விக்கப்பட்டது