பக்கம்:பாட்டுத் திறன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ 羲影 ல் ---. உடலும் உள்ளமும் கவிதைக்குக் கருத்து, உணர்ச்சி, கற்பனை, அழகிய வடிவம் ஆகிய நான்கும் மிகவும் இன்றியமையாதவை எனக் திறனாய்வாளர் கூறுவர். ஆனால், இக்கான்கும் ஒரு கவிதையில் ஒருங்கே அமைதல் அரிது. மிகச் சிறந்த கவிஞரிடத்தில் இக் நான்கும் ஒருங்கே சிறந்து அமைதல் உண்டு. இந்த நான்கிலும் உணர்ச்சியும் ஏனைய கூறுகளில் ஒன்றிரண்டும் உள்ள பாடலே உணர்ச்சியில்லாது ஏனைய கூறுகள் மட்டிலும் உள்ள பாடலை விடச் சிறந்தது என்று கவிதைகளைத் துய்ப்போர் கூறுவர். கவிதைகளைத் துய்க்கும் பழக்கம் இருந்தால், நாமும் இதே உண்மையைக்காண்போம். இதற்குக் காரணம் என்ன? உணர்ச்சி எல்லாக் காலத்தார்க்கும் எல்லா மாந்தர்க்கும் பொதுவாக அமைந்துள்ளது. வீரம், காதல், வெகுளி, இரக்கம் முதலிய உணர்ச்சிகள் வெவ்வேறு காரணங்களால் வெவ்வேறு குழ் கிலையில் பிறக்கலாம். ஆயினும் அவை எல்லோருக்கும் பொது வானவை. இந்த உணர்ச்சியைக் கவிஞர்கள் சில சமயம் கவிதை யின் வடிவத்தில் அமைப்பர்; சில சமயம் அதன் பொருளிலும் அமைப்பர். கவிதையின் ஒலி கயத்திலும் நடையிலும் உணர்ச்சி யைப் புலப்படச் செய்வதே அதன் வடிவத்தில் அமைப்பது. கவிதையின் சொற்பொருளிலும் கருத்திலும் அமைப்பதே இதைவிடச் சிறந்தது என்று கூறுவர் அறிஞர்." நாம் வாழ்க்கையில் பெறும் பல்வேறு உணர்ச்சி யதுபவத்தின் காரணமாகவே கவிதையிலுள்ள உணர்ச்சியை நன்கு அநுபவிக்க முடிகின்றது. இந்த இருவகை உணர்ச்சி களுக்கும் வேறுபாடு என்ன? வாழ்க்கையுணர்ச்சிகள் கம்மைச் 1. Winchester C. T.; Some Principles of Literary criticism p. 103.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/46&oldid=813031" இலிருந்து மீள்விக்கப்பட்டது