பக்கம்:பாட்டுத் திறன்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 安莎莎 குறியீட்டியல்:இந்தக் கொள்கை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மலார்மி வெர்லெய்ன், ரிம்பாடு போன்ற ஃபிரெஞ்சுக் கவிஞர்களால உருவாக்கப் பெற்ற ஓர் இலக்கியக் கொள்கை. காலப் போக்கில் இஃது உலகம் முழுவதும் பரவிக் கால் கொண்டு விட்டது. பொருளை நேரடியாகத் தரும் முயற்சிக்குப் பதிலாகக் குறியீடுகளைக் கையாள்வதன் மூலம் பொருளைப் படிப்போர் மனத்தில் விரியச் செய்யும் முயற்சியே குறியீட்டியல் என்ப தாகும். ‘எல்லாச்சொற்களும் பொருள் குறித்தனவே'என்ற தொல் காப்பிய நூற்பா, சொற்கள் அவை குறிக்கும் பொருள்களின் அடையாளங்களாகும் என்பதைக் குறிக்கின்றது. அடையாளங் கள் மூலம் பொருளைத் தரும் கருவியே மொழி. கவிஞன் கையாளும் சொற்கள் என்னும் அடையாளங்கள் மூலம் நாம் பொருளை நாடிச் செல்லுகின்றோம். அங்ங்ணமின்றிச் சொற் களின் வழி காட்டலுக்குக்-கைகாட்டலுக்குக்-காத்திராமல் கவிஞன் வெளியிடும் பொருளைப் படிப் போர் நேரடியாகச் சென்று அடையச் செய்யும் உத்தியே, குறியீட்டியல்' என்னும் இலக்கிய முயற்சி. மொழியின் மூலம் பேசாமல் பொருள்களைக் காட்டி அவை விளக்கும் தொனியில்-பாவனையில் - படிப் போரே பொருளை அறிந்து கொள்ளும் வகையில் குறியீடுகள் பணிபுரிகின்றன. இலக்கியக் குறியீடு தனித் தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு மொழிக்கும் காடு சார்ந்த, இயற்கை சார்ந்த தொல்கதைகள், புராணங்கள் சார்ந்த குறியீடுகள் உள்ளன. கடல், காற்று,புயல், தென்றல், மலர்கள் போன்ற குறியீடுகள் ஒவ்வொரு கவிஞ. னுக்கும் வேறு வேறு பொருள்களைச் சுட்டி சிற்பதுண்டு. கண்ணன், துரியோதனன், துச்சாதனன், மாரீசன், நக்கீரன் ஆண்டாள், கண்ணகி, பாஞ்சாலி ஆகிய காவிய மாந்தர்களும் கதைமாந்தர்களும் கூடக் குறியீடுகளாகப் பயன்படுத்தப் பெறு கின்றனர். அசோக சக்கரம், இராட்டினம். அரிவாள், சுத்தி, சம் மட்டி போன்ற சில பொருள்களும் சந்தர்ப்பங்களை யொட்டிக் குறியீடுகளாக அமைகின்றன. வசந்தம், வேள்வி, யாககுண்டம், புயல், மின்னல், விடியல், சேவல், பிரளயம், சிவப்பு, கறுப்பு போன்ற சொற்கள் சமூக மாறுதலின் குறியீடாக முற்போக்குக் 8. தோல், சொல். துற்.