பக்கம்:பாட்டுத் திறன்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 47 f பக்கத்து மங்கையின் உரசல் பல்லற்ற வாய்க்குக் கரும்பு, ஆசைக்கு அழிவேது? ஆயினும் இவன் நிலைமையோ சொல்லி முடியாது. முதுமை வறுமை சிறுமை காய்வால் முதுகு சீவாத தலையாகக் கலைந்து சிதறிக் கிடக்கும் தாள்கள்; இப்பிறவியில் விடிவில்லை. பற்றாக் குறைச் சம்பளம். பொழுது போக்கின்றிக் கூடிப் பெற்ற ஒன்பது செல்வங்கள், நவரத்தினங்கள், நீங்காத ஆஸ்த்மா, கிரந்தரத் தொல்லைகள்; என்னதான் செய்வது? 'கனவு-செல்வம் மங்கை பெருமை இளமை? வசதியோடும் வளங்களோடும் வாழ ஆசைப்பட்டும் வாழ முடியாது தவிக்கும் ஒர் அப்பாவி மனிதனின் அநுபவ உணர்வு களை விரிவாக, அழகாக, கியாயமான புதுமையான உவமை களைக் கையாண்டு விவரிக்கும் வரும் போகும் என்ற இந்தக் கவிதை மீமெய்ம்மையியல் தத்துவத்தைத் தெளிவாக விளக்கு கின்றது. வரும்போகும்' என்ற தொகுப்பிலுள்ள அலைவு' "குகை' என்ற கவிதைகளும் இத்தத்துவக் கூறுகள் கொண்டிலங்குகின்றன. நனவோடை : ஃபிராய்டின் மூல தத்துவத்திலிருந்து காலப் போக்கிற்கு ஏற்ற சில மாறுதல்களோடு கிளைத் தெழுந்ததுதான் இந்த கனவோடைத் தத்துவம். இஃது இலக் கியத்தில் உத்தி பற்றிய ஒருகொள்கையாகப் பயன்படுத்தப் பெறுகின்றது. பெரும்பாலும் இவ்வுத்தி புதினங்களில்தான் இடம் பெறுகின்றது. புதினத்தில் இடம் பெறும் ஒரு கதை மாந்தரின் புலனுணர்வுக் காட்சிகளும் எண்ணங்களும் ஒன்றுக் கொன்று தொடர்பின்றித் தோன்றுவதை எழுதிக் காட்டும் ஒருவகை உத்தியே நனவோடை. உறக்க நிலை, விழிப்பு நிலை போன்ற வேறு பட்ட உண்மை நிலைகளைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும்