பக்கம்:பாட்டுத் திறன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை . . . . . . டாக்டர் க. ப. அறவாணன் தமிழியல் துறைத் தலைவர், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி நம் தலைமுறையில் இன்றும், என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் மார்க்கண்டேயர் நம் சுப்புரெட்டியார் ஆவார்கள். முன்னையவர் ஆன்மிக மார்க்கண்டேயர். நம்மவர் எழுதும் மார்க்கண்டேயர் உழைப்பாலும், தினைப்பாலும், ஒயாது. எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் தமிழ்ப் பேராசிரியர் உலகில் கள்ளம் கபடமற்ற குழந்தையாகத் திறந்த மனத்தோடு வாழ்கின்றவர்; விரிந்த மனத்தோடு உதவு கின்றவர்; அகன்ற மனத்தோடு அனைவரையும் அனைத்துக் கொள்கின்றவர். . அவர் எழுதிய நூல்களில் அவருடைய அறிவியல் தெளிவு புலப்படும். கலையியல் தெளிவு கிடைக்கும். அறவியல் செழிப்பு கிடைக்கும். பல்முனை அறிவும், ஒருமுகப்பட்டுக் கிடைக்கும். அவர்தம் நூல்களில் ஒன்று பாட்டுத் திறன் . இந்நூல் கவித்திறனை மட்டும் ஆராயாமல், கவித்திறனுக்கு அடிக் கிடையாகக் கிடக்கும் உடலியல், உளவியல், உணர்வியல் ஆகிய அனைத்தைவும் ஆராய்இன்றது, உள்ளக் கிளர்ச்சிபற்றி வால்சன் ஆகியோர்கொண்ட கொள்கைகளை விளக்கி, பழந் தமிழர் உள்ளக்கிளர்ச்சி பற்றிக் கொண்ட கொள்கைகளைப் பொருத்திப் பார்த்து ஆராய்ந்து இருப்பது பாராட்டத்தக்கது. கவிதையின் தத்துவம், கற்பனை சொல்வளம், யாப்பு முறை, அணி நலன், தெனடை நயம், உண்மைப் பொருள் போன்ற பல்வேறு செய்திகளைப் பேராசிரியர் திறம்படவும், நிரல்படவும் விளக்கியுள்ளார், நாவின் முற்பகுதி தமிழிற்கு அறிவியல் அணிசேர்க்கும். பிற்பகுதிகள் இரண்டும் கவியியலுக்கு அணி சேர்க்கும். பாட்டுத்திறன்பற்றிப் பல்வேறு மரபு நூல்கள் தரும் கருத்து களையும் புதிய வரவு நூல்கள் கூறும் கருத்துகளையும் இணைத் துப் பிணைத்துத் தரும் பான்மையதாக விளங்குகிறது. இந்நூல், சான்றாக, குறிப்புப் பொருள், வடமொழித் தொணி', தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/5&oldid=813101" இலிருந்து மீள்விக்கப்பட்டது