பக்கம்:பாட்டுத் திறன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-3 அறிதலின் அடிப்படை உடற் செயல்களும் உளச் செயல்களும் ஒன்றோடொன்று உறவு கொள்வதில் நரம்பு மண்டலமும் உள்நோக்கச் சுரக்கும் மண்டலமும் (Eldorine System) முக்கியமாகப் பங்கு கொள் கின்றன என்று முன்னியலில் குறிப்பிட்டோம். அவற்றை ஈண்டு விளக்குவோம். உளச்செயல் மூளையுடன் தொடர்புடையது. ஏன்? நரம்பு மண்டலம் முழுவதுடனும் தொடர்பு கொண்டது என்று கூடக் கூறலாம். எனவே மேற்குறிப்பிட்ட விளக்கத்திற்குள் புகுவதற்கு முன்னர் நரம்பு மண்டலத்தின் அமைப்பை ஒரளவு புரிந்து கொள்ளுதல் சாலப் பயன்தரும். உளச் செயல்களால் இரு பயன்கள் உள: 1) தனியாளை ஒருங் கிணைப்பது: அஃதாவது, தனியாளிடம் அமைந்துள்ள எல்லா உள்ளுறுப்பு களையும் இணைந்து இயங்கச் செய்வது; 2) சூழ்நிலைக் கேற்றவாறு, தனியாளைப் பொருத்தப்பாடடையச் செய்தல், இந்த இரண்டு கோக்கங்களையும் சாத்தியப்படச் செய்வது மிகச் சிக்கலான செய்தித்துறை போன்றமைந்துள்ள நரம்பு மண்டல மாகும். உடலின் ஒரு பகுதி பிறிதொரு பகுதியுடன் தொடர்பு கொள்வதற்கும் உடலிலுள்ள எல்லாப் பகுதிகளும் வெளி யுலகச் செய்திகளையறிந்து அவற்றிற்கேற்பச் சமாளித்துக் கொள்வதற்கும் இக் நரம்பு மண்டலம் துணை செய்கின்றது. சுருங்கக் கூறின், நரம்பு மண்டலம் அறிதலின் அடிப்படையாக அமைகின்றது. புறவுலகத் தகவல்களையும் அகவுலகச் செய்தி களையும் அறிந்து கொள்வதற்கும் இதுவே அடிப்படையாகும். நரம்பு மண்டலம் : உளவியலுக்குத் தேவையான நரம்பு மண்டலத்தைப்பற்றிய ஒருசில குறிப்புகளை மட்டிலும் சுருக்க மாகக் காண்போம். நரம்பு மண்டலம் வெளிநரம்பு மண்டலம், 1, Qataũ H rútị tnsảrt-scử - Peripherai nervous system,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/58&oldid=813135" இலிருந்து மீள்விக்கப்பட்டது