பக்கம்:பாட்டுத் திறன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பாட்டுத் திறன் பொருத்தப் பாட்டு மையங்களாலும் ஆகியது. சிறு மூளைக்கும் பாலத்திற்கும் மேலாகப் பல்வகையடுக்குகள் அமைந்த சிறந்த இணைப்பு மையங்கள் உள்ளன. இவை உள்துடிப்புப் பொருத் தப்பாட்டிலும் உயிர் சூழ்நிலையோடு பொருத்தப்பாட்டை வதிலும் அதிகப் பங்கு கொள்கின்றன. இம் மையங்களைப் பற்றி நாம் அறிந்தது கைமண்ணளவு: அறியாகது உலகளவு. உடற்பாகுபாட்டு முறையில் இவற்றின் தொடர்புகளை இவண் கூற முயல்வது மற்றொன்று விரித்தலாகும். பூத்தண்டு முகுளத்திற்கு மேலும் பெரு மூளையின் அரைக்கோளப் பகுதிகளுக்குக் கீழும் பூத்தண்டு' என்ற துணை மையம் உள்ளது. இது சாம்பல் நிறமுள்ளது. இப்பகுதி கீழ் நிலைப் பிராணிகளிடம் சிறந்த பங்கினைப் பெறுகின்றது. காரணம், இதுதான் புலனுணர் அனுபவங்களின் இருப்பிட மாகவும், கடுமையமாகவும் அமைந்துள்ளது. எனினும், மனிதனி டம் பெரும்பான்மையான இச் செயல்கள் மேல் மையங்களுக்கு மாற்றப் பெற்றுள்ளன. மனிதனிடம் பூத்தண்டு முக்கிய பங்கினைப் பெறுவதற்குக் காரணம், மூளைக்குச் செல்லும் எல்லா நரம்பு இணைப்புக்களும் இதன் வழியாகவே செல்லு கின்றன. இது ஒரு-வழியாக மட்டிலும் அமைவதோடன்றி, ஒரு மின்விசையாணிப் பலகை”யாகவும் அமைந்து மூளையின் புறணியுடன் பொருத்தமான இணைப்புகளைத் தரவும் துணை யாக இருக்கின்றது. தோலில் பிறக்கும் உள் துடிப்புகள் புறணியிலுள்ள ஒரு பகுதிக்கும், செவிகளிலுள்ளவை புறணி யின் பிறிதொரு பகுதிக்கும், இவ்வாறு பல பகுதிகட்குமாக அனுப்பப் பெறுகின்றன. பல புல இயக்க இணைப்புகள் பூத் தண்டில்தான் உண்டாக்கப் பெறுகின்றன. பெரும்பாலும் இவை நடத்தல் போன்ற தானாக இயங்கக்கூடிய செயல்களுட னேயே தொடர்புள்ளன. பூத்தண்டு, பெருமூளைப் புறணியி னின்றும் உள்துடிப்புகளைப் பெறுகின்றன. இவை தாமாக இயங்கும் செயல்களைத் தடுத்து கிறுத்தக்கூடியவையாக உள்ளன. புறணி நீக்கப் பெற்றாலும், அல்லது காயமேற் பட்டுக் கெட்டாலும், தாமாக இயங்கும் எதிர்வினைகள் மிகைப் படுத்தப் பெறுகின்றன. 21. g $$s$irG-Thalamuss, 23. மின்விசையாணிப் uas» o-Switchboard,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/64&oldid=813149" இலிருந்து மீள்விக்கப்பட்டது