பக்கம்:பாட்டுத் திறன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் அ7 அக்ரோமிகாலி' என வழங்குவர். இங்ங்ணமே அடித்தலை முன் சுரப்பி குழந்தையின் வளர்ச்சிப்பருவத்தில் அளவு குறைந்து செயற்பட்டால், அக்குழந்தை குள்ளனாக (dwarf) வளரும், எனினும், அதன் அறிவு நிலை சாதாரணமாகவே இருக்கும். மிக இளமையிலேயே அடித் தலைச் சுரப்பியின் சாரங்களைக்* கொண்டு வளர்ச்சி நிலையை அதிகரிக்கச் செய்யலாம். அடித்தலைப் பின்சுரப்பியிலிருந்து கண்ணாடி போன்ற இரண்டு சாறுகள் கசிந்து முதுகு நடுநரம்பு நீரில்" விழுகின்றன. இவற்றுள் ஒன்று குருதியோட்டத்தையும் குருதியமுக்கத்தையும் சிறுநீர்ப் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துவதுடன், பால் கசிவதை யும் பெருக்குகின்றது; மற்றொன்று கருப்பையையும் சிறுநீர்ப் பையையும் குவிந்து குவிந்து இயங்கச் செய்கின்றது. இவ்வாறு கருப்பை குவிவதாலேயே குழவி வெளியே தள்ளப்பெறுகின்றது. குழந்தைக் கருவுயிர்ப்பின் பொழுது குழந்தை வெளியில் வரா மல் தாய் வேதனைப்படுங்கால் மருத்துவர் அடித்தலைச் சுரப்பி யின் சாரத்தை ஊசி மூலம் உடலில் குத்திப் புகுத்திக் கருப்பையை நன்கு இயங்கச்செய்து சுகப்பிரசவம் செய்வதை, நாம் காண்கின்றோமன்றோ? எனவே, இங்கனம் பிள்ளைப் பேற்றிலும், குழவியைப் பேணலிலும் துணை செய்யும் இச்சுரப்பி, ஒருவகையில் தாய்மை என்ற உள்ளக் கிளர்ச்சிக்கே மூலம் என்று கருதலாம். அடித்தலை கடுச் சுரப்பியின் செயல்கள் இன்னவை என்று இன்னும் அறியக் கூட வில்லை. புரிசைச்சுரப்பி" இது கழுத்தின் அடிப்புறத்தில் குரல் வளைக்கு முன்புறமாகக் காறை எலும்பிற்கு மேற்புறத்தில் அமைந்துள்ளது. சாதாரண்மாக இது ஒர் அவுன்சு எடைக்குக் குறைவாகவே இருக்கும். சுமார் இரண்டரை அங்குல நீளமும் ஒன்றரை அங்குல அகலமு முள்ள இது குதிரைச்சேண வடிவ முடையது. துரம்பிலாச் சுரப்பிகளுள். இது, கேரற்ற தன்மை வாய்ந்தது. பிற துாம்பிலாச் சுரப்பிகளிலுள்ளதை விட இதற்கு வரும் குருதியின் அளவும் அதிகம். இச் சுரப்பி கணிசமான அளவுகளில் தன்னிடம் சுரக்கும் இயக்க ைேரச் சேகரித்து வைத்துக்கொள்ள வல்லது; பிற சுரப்பிகளிடம் இத்தன்மை 17. sržarris zrač - Aerimegaly. - - 18. ** rin - Extract. 3. முதுகு நடுகசம்பு திச் Spinal fluid. 20, asso ** **ùá-Thyroid gland

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/78&oldid=813179" இலிருந்து மீள்விக்கப்பட்டது