பக்கம்:பாட்டுத் திறன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7ί) பாட்டுத் திறன் இதயத்தைப்பற்றியது. இச் சுரப்பி அளவுக்கு மீறிச் செயற்படு பவர்களிடம் இதயத் துடிப்பும் மாரடைப்பும் அடிக்கடி நிகழு கின்றன. குழந்தையின் வளர்ச்சிப்பருவத்தில் இச் சுரப்பி அளவுக்கு மீறிச் செயல் பட்டால், வளர்ச்சி, சிறப்பாக உயரத் தில், விரைவாக நடைபெறுகின்றது. இது குள்ளமைக்கு' நேர் எதிரிடையானது. ஆயினும், மனவளர்ச்சியோ அறிதிறனோ அதிகரிக்கப் பெறுகின்றதாக அறியக்கூடவில்லை. துணைப் புரிசைச் சுரப்பிகள்??: இவை புரிசைச்சுரப்பிக்குப் பின் புறமாக, பக்கத்திற்கு இரண்டாக, நான்கு அலகுகளாக (units) அமைந்துள்ளன. இவை நான்கும் உடலில் கால்சியம்: பாஸ்வரம் ஆகிய இரண்டின் அளவினையும் பயனையும் கட்டுப் படுத்துகின்றன. கால்சியம் எலும்பு வளர்ச்சிக்குப் பயன்படு வதுடன் நரம்பு மண்டலம் சரியாகச் செயற்படுவதற்கும் மிகவும் இன்றியமையாததாகவுள்ளது. துணைப் புரிசைச் சுரப்பிகளை அகற்றிவிட்டால் குருதியிலுள்ள கால்சியகிலை குறைவதுடன் இயல்புக்கு மாறான முறையில் நரம்புமண்டலம் செயற்பட்டு ஈர்ப்புவாதமாகப் பரிணமிக்கின்றது. துணைப் புரிசைச்சிரப்பிகளினின்று உண்டாகும் இயக்க நீர் “பாராதார்மோன்' என்று வழங்கப்பெறுகின்றது. பாராகார் மோன் அதிகமாக உற்பத்தியானால், அது குருதியிலுள்ள கால்சிய அளவினை அதிகரிக்கச் செய்கின்றது; இதனால் என்புக் கூட்டிலுள்ள உப்பு சற்றுக் கரைகின்றது. துணைப் புரிசைச் சுரப்பிகளுள் ஒன்றில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் கட்டி உண்டானால் இங்கிலை ஏற்படுகின்றது. குருதியிலுள்ள அதிகமான கால்சியச் சத்தைச் சிறுநீரகங்கள் போன்ற வேறு உறுப்புகளில் படியச் செய்து அவை செயற்படுவதைக் கெடுக் கின்றன. துணைப் புரிசைச் சுரப்பிகள் அடித்தலை முன் சுரப்பியால் கட்டுப்படுத்தப்பெறவில்லை. குருதியிலுள்ள கால்சியம்தான் துணைப்புரிசைச்சுரப்பிகள் செயற்படுவதை ஒழுங்குபடுத்துகிறது என்று தெரிகின்றது. ஆயினும், இது சோதனையால் இன்னும் உறுதிப்படுத்தப் பெறவில்லை. குருதியிலுள்ள கால்சிய அளவு 31. Ssirsirsolo - Cretinism. 82. துணைப் புரிசைச் சுரப்பிகள் - Para-thyroids.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/81&oldid=813187" இலிருந்து மீள்விக்கப்பட்டது