பக்கம்:பாட்டுத் திறன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் of அதிகரிக்கும்பொழுது பாராகார்மோன் சுரப்பது தடைப்படுத்தப் பெறுகின்றது; கால்சியக் குறைவு அது சுரப்பதைத் தாண்டு. கின்றது. சில நச்சுப்பொருள்களை நல்ல பொருள்களாக மாற்றவும், குருதியின் காரத்தன்மையைச் சீராக வைத்துக் கொள்ளவும் இச் சுரப்பிகள் துணை செய்கின்றன. கழுத்துக் குழைச் சுரப்பி’ : இது மார்பின் மேற்புறத்தில் அமைந்துள்ளது. இது குழவிப் பருவத்தில் விரைவாக வளர்ந்து பிறகு சுருங்குகின்றது; முன் குமரப்பருவத்தில் அது செயற் படுவதே இல்லை. உடலிலுள்ள ஏனைய சுரப்பிகள் முற்றிச் செயலுற்று உடலை ஆட்டிப் படைப்பதற்குமுன் உடலுரம் பெறுவதற்கு இச் சுரப்பி துணை செய்கின்றது. உடல் வளர்ச்சி பெறும் வரையிலும் மற்றைய சுரப்பிகள். முற்றாதபடி அடக்கி யாண்டு, குழந்தை நிலை நீங்கியதும் இச்சுரப்பி சுருங்கிப் போகின்றது. இப்பொழுது ஏனைய சுரப்பிகள் செயலுறு கின்றன. - மாங்காய்ச் சுரப்பிகள்?! : மாங்காய்ச் சுரப்பிகள் இரண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேற்கோடியிலும் வயிற்றிலுள்ள பெரிய குருதிக் குழல்களுக் கிருபுறமும் ஒவ்வொரு சுரப்பியாக ஒட்டிக்கொண்டுள்ளது. இந்த இரண்டு சுரப்பிகள் நீக்கப்பெறினும், அல்லது சிதைவுறினும் இருபத்துநான்கு மணி நேரத்தில் இறப்பு நிகழ்ந்துவிடும். ஏனைய சுரப்பிகளை விட இவை உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை என்பது புலனாகின்றது. - உடற் கூற்றியலின் அடிப்படையிலும், செயலின் அடிப் படையிலும் கோக்குமிடத்து ஒவ்வொரு மாங்காய்ச் சுரப்பியும் ஓர் இரட்டை உறுப்பாகும். அதில் அகணி’ என்ற நடுப்பகுதி யும் புறணி என்ற வெளிப்பகுதியும் உள்ளன. ஒவ்வொன்றும் அமைப்பிலும் செயலிலும் வேறுபடுகின்றன; எனினும், ஒவ் வொன்றும் தரம்பிலாச் சுரப்பியாகவே செயற்படுகின்றது. அகணி சுரக்கும் சாறு அட்ரெனின்" என்றும், புறணி சுரக்கும் சாறு கார்ட்டின்' என்றும் வழங்கப்பெறுகின்றன. 惑器。 கழுத்துக்குழைச் சுரப்பி ملا Thymus gland. 34. tar éisz irá s růássir - Adrenal glands. 35. <*&&»ii - Medulla. 36. ww.so - Cortex. 37, scorests; - Adrenin, 38. ****** - Cortin.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/82&oldid=813189" இலிருந்து மீள்விக்கப்பட்டது