பக்கம்:பாட்டுத் திறன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பாட்டுத் திறன் மைகளைக் காண்பதும் அருமையினும் அருமையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, அடித்தலைச் சுரப்பி தனியாளின் ஆளுமைக் கும் நடத்தைக்கும் எவ்வாறு காரணமாகின்றது என்று சோதித் தறிதல் அருமையாகும். காரணம், இச் சுரப்பி ஏனைய சுரப்பி களைத் தாண்டியே இயங்குகின்றது. சாதாரணமாக இச்சுரப்பி அளவுக்கு மீறிச் செயற்பட்டால் தனியாள் பலசாலியாகவும், தாக்குங் தன்மையுள்ளவனாகவும், தன்னடக்கமுள்ளவனாகவும், சூழ்ச்சியுள்ளவனாகவும் வளரக்கூடும் என்றும், இஃது அளவு குறைந்து செயற்பட்டால் பலமின்மை, மடிமை, கோழைத் தன்மை போன்ற பண்புகள் வளரக்கூடும் என்றும் உள்நோக்கிச் சுரக்கும் சுரப்பியை ஆய்ந்த வல்லுநர்கள் திட்டமாகக் கூறு கின்றனர். எனினும். இப் பண்புகள் அடித்தலைச் சுரப்பியின் சாறுகளால் மட்டிலும் ஏற்படக்கூடியதன்று, எல்லாச் சுரப்பி களின் சாறுகளின் சமனிலையின்மையாலேயே இவை ஏற்படு கின்றன. தனியாளின் நடத்தையை மட்டிலும் கொண்டு ஒரு குறிப்பிட்ட உள்நோக்கிச் சுரக்கும் சுரப்பிக் கலைவின் குறையை அறிந்துகொள்ள இயலாது. இது காரணமாகவே, ஒருவர் தம் முடைய ஆளுமையை இச் சுரப்பிகளின் அளவைகளைக்கொண்டு பகுத்தறிய முனைவதும், அதன்பிறகு சுரப்பிச் சிகிச்சையால் அதனை மேம்பாடு அடையச் செய்ய எண்ணுவதும் பயனற்ற செயல்களாகும். தனியாளின் எதிர்வினையில் இன்னொரு சிக்கலும் உள்ளது. அது தன் கிலைண்யக் குறித்துத் தன் நண்பர்கள் கூறும் குறிப்பு களைப் பொறுத்துதான் எதிர்வினை புரிதலாகும். புரிசைச் சுரப்பி செயற்படுவது குறைந்தால் அது மடிமையை உண்டாக்கு கின்றது. ஆனால், யாராவது கண்பரொருவர் தனியாளின் மடிமையைப் பற்றிக் கிண்டல் செய்தால், அவனிடம் எரிச்சல் தன்மை (சிடுசிடுப்புத்தன்மை) வளர்கின்றது; இது புளிசைச் சுரப்பிச் சாறுகளால் மட்டிலும் உண்டாவதன்று. அங்ஙனமே, இனக் கோளங்களின் சாறுகளின் குறைவினால் ஒருவர் பாலு ணர்ச்சியில் கவர்ச்சியின்றி இருக்கலாம். இதைப் பற்றி நண்பர் கள் கூறும் கிண்டல் பேச்சு இயல்புக்கு மாறான பால் நடத்தை யில் கொண்டு செலுத்தக்கூடும்.சில உள்நோக்கிச் சுரக்கும் சுரப்பிச் சமநிலையின்மை முன் குமரப் பருவத்தினனிடம் தாங்கி வழியுங் தன்மையையுண்டாக்கி எதிலும் ஒருமுகமாகக் கவனம் செலுத்த முடியாத நிலையினை விளைவிக்கலாம்; ஆனால், இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/87&oldid=813198" இலிருந்து மீள்விக்கப்பட்டது