இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காலை மலர்ந்ததடி கண்ணே - உன் கண்கள் மலராதோ கண்ணே சாலை மரங்களில் ஏறிக் - குயில் சங்கீதம் பாடுதடி கண்ணே பூக்கள் விரிந்ததடி கண்ணே - சுற்றிப் பொன்வண்டு பாடுதடி கண்ணே காக்கை கரையுதடி கண்ணே - இளம் கன்ருென்று தாவுதடி கண்ணே எட்டிக் கடல்மீது பார்க்கும் - கதிர் எத்தனை விந்தையடி கண்ணே ! பட்டுப்போல் தோன்றுதடி கண்ணே-தங்கப் பாலம் அமைக்குதடி கண்ணே ! 82