பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து 101

முரசு கேட்டது போலக் கருதிக் கட்டவிழ்த்துக் கொண்டு தலைநிமிர்ந்து நடைபோடுகின்ற யானைகளைப் புலவர் அழகுறச் சித்திரிக்கின்றார்.

போர்ப்புறு முரசம் கண்ணதிர்ங் தாங்கு கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி நுதலணைந்து எழுதரும் தொழில் நவில் யானை

-பதிற்றுப்பத்து 84: 2-4

சேரர் வீரத்தில் மேம்பட்டுச் சிறந்திருந்தமை போன்றே நெஞ்ச ஈரத்திலும் சிறந்து விளங்கினர். அவர்கள் கொடை மனம் மிகுந்தவர்கள். செல்வக் கடுங் கோ வாழியாதன் என்னும் மன்னன் பெரும் பொருள் களைப் பிறருக்குக் கொடையாகக் கொடுத்தற்கு ஒரு நாளும் வருந்தமாட்டான் எனவும், கொடை வழங்குந் தோறும் அதற்காக மகிழமாட்டான் என்றும், கொடுக்கும் போதெல்லாம் நிரம்பக் கொடுப்பான் என்றும் குறிப்பிடப் படுகின்றான்.

ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான் ஈத்தொறும் மாவள் எரியனென நுவலுகின் கல்லிசை தரவங் திரினே.

-பதிற்றுப்பத்து 61:12-14

செங்குட்டுவன் தனக்கு என ஒருவகைச் சோற்றினை யும் பிறர் க்கு என்று இன்னொரு வகைச் சோற்றினையும் சமைக்குமாறு உத்திரவிடும் வழக்கம் இல்லாதவ னென்பதனைப் பரணர் அழகுறக் குறிப்பிட்டுள்ளார்.

சோறு வேறு என்னா ஊன்துவை யடிசில்

-பதிற்றுப்பத்து: 45-13

மேலும் போர்க்களத்தே பெற்ற அரிய பெரிய பொருளையும் தன்னைச் சுற்றியுள்ளவர்க்கு வாரி வழங்கி