பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to 102 பாட்டும் தொகையும்

விடுகின்ற வள்ளன்மை மிக்குடையன் செங்குட்டுவன் என் பதையும் பரணர் புலப்படுத்தியுள்ளார்.

பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற அரிய என்னாது ஓம்பாது வீசி

-பதிற்றுப்பத்து 44: 3-4

பதிற்றுப்பத்துப் பாடல்கள் ஆழ்ந்த கவியின்பமும்’ அரிய சொல்லாட்கியும், அழகிய உவமை நயமும் கொண்டு திகழும் ஒரு வரலற்ற்றுப் பெட்டகமாகும். சங்ககாலத்தில கவிப்புலமை ஒச்சிய சிறந்த புலவர் பெருமக்களின் படைப்பாகப் பதிற்றுப்பத்துத் திகழ்கின்றது, சேரநாட்டு மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரளாதனுடைய மனைவி சீற்றங்கொள்ளாது அமைந்த கற்பினையுடைவ வள் என்பதும், ஊடற் காலத்திலேயும் இனிய சொற்க ளையே கூறுபவள் என்பதும் கவிக் கூற்றாகும்.

ஆறிய கற்பின் அடங்கிய சாயல் ஊடினும் இனிய கூறும் இன்னகை

-பதிற்றுப்பத்து 16: 10-11

இத்தகைய சொற்சித்திரம் கவிஞனின் கவினார் படைப்புத் திறனை விளக்கும். ‘உன் மனைவியோடு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வாயாக’ என்று பாலைக் கெளதமனார் சேர மன்னனை வாழ்த்துகிறார்.

வேயுறழ் பணைத்தோள் இவளோடு ஆயிர வெள்ளம் வாழிய பலவே

-பதிற்றுப்பற்று 21: 37-38

அரசனை வாழ்த்தும் புலவர்கள் தக்க சமயத்தில்

அறிவுரை கூறவும் தவறவில்லை. கோபம், காமம், அள விறந்த கண்ணோட்டம், அச்சம், பொய்ச்சொல், கழி