பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பாட்டும் தொகையும்

விரும்பிய பெண்ணின் தோளினைத் தழுவுதல் வேண்டும். ஏனெனில், கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமை யிலும் ஆயமகள் தவழு மாட்டாள். - = 1கொல்லோற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆயமகள். -கலித்தொகை 103; 63-64

ஏறு தழுவிய அடக்கிய நிலம், கெளரவர் நூற்று வரைப் பாண்டவர் ஐவர் வென்று அடக்கிய போர்க்களம்

போலிருந்தது என்கிறார் சோழன் நல்லுருத்திரன்.

புரிபுமேற் சென்ற நூற்றுவர் மடங்க வரிபுனை வல்வில் ஐவர் அட்ட பொருகளம் போலும் தொழுஉ

-கலித்தொகை 104: 57-59 ஆயரிடையில் காதல் மணம். கமழ்ந்தது என்பதனை,

ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின் நின் வெய்யனாயின் அவன் வெய்யை நீயாயின் அன்னை நோதக்கதோ இல்லைமன்-நின்நெஞ்சம் அன்னை கெஞ்சாகப் பெறின் - --- - - “.

-கலித்தொகை 107: 20.23

-

என்னும் அடிகள் கொண்டு அறியலாம்.

ஐந்தாவதாக அமைந்துள்ள நெய்தற்கலியினைப் பாடியவர் நல்லந்துவனார் ஆவர். மாலைக் காலம் தலை விக்குத் துயர் செய்வது புனையப்பட்டுள்ளது. நெய்தற் கலிப் பாடல்கள் அவலச் சுவையை மிகுவிப்பனவாகும். தலைவிக்கு மாலைக்காலம் வந்ததும் பசலை நோயும் உடன் வந்து விடுகின்றது. காதலர் தலைவியை விட்டு நீங்கும் பொழுதெல்லாம் அப்பசலை நோய் தலைவியின் மேனியை வந்தடைந்து விடுகின்றது. அவர் அருகில் வந்து அவளைத் தொடும் பொழுதெல்லாம் அப்பசலை நோய் அவளைவிட்டு நீங்கி விடுகின்றது.