பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 பாட்டும் தொகையும்

கூறுவதில் முன்நிற்கின்றது. சுருங்கக் கூறினால், இத் தொகை நூல் கிடைத்த பின்புதான் சங்கத்தமிழரின் மேன்மை நன்கு புலப்பட்டது. ஒருவேளை இந்நூல் கிடைத்திராவிட்டால் நம் வரலாற்றின் பல பகுதிகள் இருண்டுபோயிருக்கும். எட்டுத்தொகை நூல்களில் பதிற்றுப் பத்தும் புறநானூறும்தாம் புறப்பொருள் தழுவியவை என்றாலும், புறப்பொருள் இவ்வளவு விரிந்ததா? என வியப்புறும் வண்ணம், புறப்பொருளின் எல்லைகளையெல்லாம் தொட்டுக்கொண்டு செல்லும் ஒர் இலக்கியப் பேராறாகப் புறநானூறு விளங்குகின்றது. இதனைப் பண்டைத்தமிழ்க் கருவூலம் என்றும். பழந் தமிழ்ப் புதையல் என்றும் கூறுவதில் மிகையொன்றும் இல்லை. புறநானூற்றை ஆழக்கற்றவர்கள் இவைகுறைந்த வருணனையே என்பதை நன்கு உணர்வர்.

வரலாறு, சமூகவியல், அரசியல், இலக்கியம், சமயம், தத்துவம் முதலிய பல்வேறு செல்வங்களும் பொதிந்து கிடக்கும் புதையல் என்று தெளிந்த அளவில் பலதுறை அறிஞர்களும் புறநானூற்றை நாடி வரலாயினர். அதன் காரணமாகத் தமிழில் பல அருமையான நூற்கள் தோன்றி யுள்ளன. தமிழ்ப் புலவர்களின் வரலாறுகள், பண்டைத் தமிழ் மன்னர்களின் வரலாறுகள், சிற்றரசர் குறுநில மள்னர்களின் வரலாறுகள், வள்ளல்களின் வரலாறுகள், நாகரிகப் பண்பாட்டு வரலாறுகள், சமய வரலாறு முதலிய பலப்பல வரலாறுகள் புறநானூற்றை அடிப்படையாக வைத்துக் கடந்த காலங்களில் எழுதப்பட்டுள்ளன. புற நானு ற்றுப் பாடல்களைக் கதைகளாகவும் காட்சிகளாக வும் பல அறிஞர்கள் படைத்துக் காட்டியுள்ளனர். அன்று மக்களிடம் நிலவிய உயர்ந்த மனப்பாங்கு சில அறிஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு நூல்வடிவம் பெற் றுள்ளது. மொழியியல் அறிஞர்கள் மொழி அன்றிருந்த நிலையையும், வளர்ந்த வளர்ச்சியையும் புறநானுாற்றைக் கொண்டு ஆராய்ந்து பல அரிய ஆராய்ச்சிகளை வெளி