பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பாட்டும் தொகையும்

இவ்வாறு திருமுருகாற்றுப்படை தொடங்கி இறுதியில் பழமுதிர் சோலையில் பாயும் அருவியின் அழகுக் காட்சி யோடு முடிகிறது

முருகனை அடையவேண்டும் என்ற தலைமையான உள்ளத்துடன் முருகளை நாடிச்சென்றால் முருகன், ‘அஞ்சாதே! நின் வரவை யான் முன்னரேயே அறிவேன்’ என்று அன்புகளிைந்த சொற்களைக் கூறி, ஒப்புயர்வற்ற வீடுபேற்றினை இம்மைப் பிறப்பிலேயே அடைந்து இன்புறத்தக்க அளவிற்குப் பெறற்கரும் பரிசில் நல்கி. அருள்பாலிப்பான் என்கிறது திருமுருகாற்றுப்படை.

மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் சேவடி படருஞ் செம்மல் உள்ள மொடு கலம்புரி கொள்கைப் புலம்புரிங் துறையுஞ் செலவுநீ நயந்தனை யாயிற் பலவுடன் நன்னர்நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே.

-திருமுருகாற்றுப்படை : 60-66

இத்திருமுருகாற்றுப்படையின் ஆ சிரி ய ர் மதுரைக்

கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவர். இவர் சங்க காலத்தே வாழ்ந்த பெரும்புலவாகளில் ஒருவர்: புலமைத் திறன் மிக்கவர். செவ்விய சொற்களைத் தம் பாடலில் வைத்து அழகிய சொல்லோவியம் தீட்டக்கூடியவர். பத்தியின் ஈடுபாட்டில் தம்மை மறந்து திளைப்பவர் முருகனை அழகு கொலுவீற்றிருக்கும் இடங்களிலும் பொதுவிடங்களிலும் கண்டு துதித்தவர். நாள்தோறும் நக்கீரர் உரைத்த திருமுருகாற்றுப்படையை ஒதினால் முருகன் முன்னே தோன்றி அவர்தம் மனக்கவலையை யெல்லாம் தீர்த்து, ஒதியவர் உளங்கொளவேண்டியன எல்லாவற்றையும் வழங்குவான் என்பது தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் நிலவிவரும் நம்பிக்கையாகும்.