பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பாட்டும் தொகையும்

தின்னுமானால் அந்த யானை தின்பதைவிட அது தன் தாலால் மிதிப்பதே அதிகமாகும் என்று கூறி அவ்னைத் திருத்துகிறார்.

போர்நெறி அக்காலத்தில் பின்பற்றப்பட்டது. என்பதை,

ஆவும் ஆன் இயற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யிரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்ஆம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் என அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் கொல்களிற்று மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும் எம்கோ வாழிய குடுமி

-புறநானூறு 9

என்ற நெட்டிமையார் பாடல் உணர்த்துகின்றது. பசு, பார்ப்பனர், பெண் டிர், பிணியுடையோர், குழந்தை பெறாத இளந்தம்பதியர், முதலியோர்களை விலக்கியே போர் செய்தனர். புறமுதுகு இட்டு ஒடுவோரையும் அவர்கள் அம்பெய்வதில்லை.

பல அரசர்கள் சிறந்த புலவர்களாக விளங்கியுள்ளதி லிருந்து, அன்றைய மக்கள் கல்வியின் பயனை நன்குணர்ந் திருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே பிறப்புஓர் அன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும்.மனம் திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் ம்ேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

- புறநானுாறு : 183

என்ற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் - பாட்டு அவனது புலமைக்கும், அச்சமூகம் கல்வி பற்றிக் கொண்டி ருந்த எண்ணத்திற்கும் சான்று பகரும்.