பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறுபாணாற்றுப்படை 17

இப்பாட்டு, ஒய்மாநாட்டு நல்லியக் கோடனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று மீளும் சிறுபாணன் ஒருவன், வழியில் கண்ட வறுமையால் வாடும் பாணன் ஒருவனை அவ்வள்ளலிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந் துள்ளது. கதிரவனின் கொடிய வெப்பத்தால் ஆழமாகப் பாதித்திருக்கும் பாலை நிலத்தின் வழியே வறுமையால் வாடிமெலிந்த பாணன் ஒருவன், தன் வறுமையைப் போக்கவல்ல வள்ளல் ஒருவனை நாடிப் போய்க்கொண் டிருக்கிறான். அவனுடன் அவன் குடும்பமும் வறுமையால் மெலிந்து வாடிச் சென்றுகொண்டிருக்கிறது. நெடுவழி நடந்த வருத்தத்தால் விறலி களைத்துப் போயுள்ளாள். ஒடி இளைத்த நாயின் நாக்குப்போல, மான்போல் மருண்ட பார்வையுடைய அவளின் அடிகள் காணப்படுகின்றன. வழிநடை வருத்தம் தீர அவர்கள் ஒரு மரநிழலில் தங்கி இளைப்பாறுகின்றனர்.

உயங்குநாய் நாவின் கல்லெழில் அசைஇ, வயங்கிழை உலறிய அடியின் அடிதொடர்ந்து

மடமான் நோக்கின் வாணுதல் விறலியர், நடைமெலிங் தசைஇய கன்மென் சீறடி

-சிறுபாணாற்றுப்படை : 17-32 அவ்வமயம் நல்லியக் கோடனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்ற பாணன் ஒருவன் திரும்பி அவ்வழியே வருகிறான். தன்னையொத்த கலைஞனின் வறுமை வளம்பெற்ற க ைல ளு ைன வாட்டியெடுக்கிறது. அவன் மாட்டுக் கொண்ட அருள் காரணமாக அவனைப் பார்த்து, “பாணர் தலைவனே! நல்லியக் கோடனது ஒய்மாநாடு சேர நாட்டைக் காட்டினும் செல்வம் செழிப்பது: பாண்டிய நாட்டைக் காட்டிலும் பயன்மிக்கது; சோழ நாட்டைக் காட்டினும் செழுமை வாய்ந்தது. அவன் நாட்டில் அமைந்துள்ள ஊர்களும் வளம்மிக்கவை. அவன் குடைக்கீழ் வாழும் மக்கள் கொடை நெஞ்சு வாய்ந்

LJ.-2