பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாட்டும் தொகையும்

தவர்கள்; விருந்தோம்பற் பண்பில் தலைசிறந்தவர்கள். நல்லியக் கோடனோவெனில், கடையெழு வள்ளல்கள் மா ய் ந் த பின்னர் அவர்தம் கொடைமனத்தைக் கொண்டிருப்பவன்.

  • - A - H -- * * * * * * * * * * .. என வாங்கு எழுசமங் கடந்த எழுவுறழ் திணிதோள் எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம் விரிகடல் வேலி வியலகம் விளங்க ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்

-சிறுபாணாறறுப் படை : 111-115

  • * * * * * * *

அவனிடம் சென்று அவனைப் புகழ்ந்து பாடினால் உன் வறுமையின் வாட்டம் நீங்கப் பலவகைச் செல்வங்களை வாரி வழங்குவான்’ என்று தன் அனுபவத்தைக் கூறி, அவனுடைய தலைநகருக்குச் செல்லும் வழியினையும் விளக்கமாக எடுத்துரைத்தான்.

இப்பாட்டில் விறலியின் கேசாதி பாத வருணனை, சேர பாண்டிய சோழ நாடுகளின் முற்கால வளம், கடையெழு வள்ளல்களின் கொடைமடம், ஒய்மானாட்டின் வளம், நல்லியக்கோடனின் நயத்தகு பண்புகள், எயிற் பட்டினம், வேலூர், ஆமூர், கிடங்கில், மாவிலங்கை ஆகிய ஊர்களைப் பற்றிய குறிப்புகள், அவ்வவ் ஊர்களிற் கிடைக்கும் உணவு வகைகள், நல்லியக் கோடன் விருந் தோம்பும் திறம், பரிசில் நலகும் பாங்கு முதலியன யாவும் விளங்கக் கூறப்படுகின்றன. மாவிலங்கை ஒய்மாநாட்டின் தலைநகராகும். இக்காலத்துத் திண்டிவனத்தைச் சுற்றி யுள்ள பகுதிகள் அன்று ஒய்மாநாடு எனப்பட்டன. இப் பகுதியை ஆண்ட நல்லியக்கோடன் வீரமும் ஈரமும் சான்றாண்மையும் ஒருங்கே வாய்ந்தவன். அவனுடைய அரண்மனை வாயில் பொருநர்க்கும், புலவர்க்கும், அரு மறை அந்தணர்க்கும் எப்போதும் திறந்திருக்குமாம்.