பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பாட்டும் தொகையும்

கருதலாம். ஐங்குறு நூற்றைப் பாடியுள்ள புலவர்கள் அனைவரும் சங்கச் சான்றோர்களாவார். அவர்கள் இலக் கிய நயம் தோய்ந்த இனிய பாடல்களை யாத்துள்ளனர் என்று ஐங்குறு நூற்றுப் பாடல்களை மேம்போக்காகப் படிப்பவர்களுக்கே விளங்கும். இந்நூற்பாடலிலுள்ள நயம் கெழுமிய செய்யுள்களும், செய்யுட்பகுதிகளும் வருமாறு :

மருதம்

வேட்கைப் பத்து

நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க! விளைக வயலே! வருக இரவலர்! பால் பல ஊறுக! பகடுபல சிறக்க! பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஒதுக! பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக! வேந்து பகை தணிக! யாண்டுபல கந்துக! அறம்கனி சிறக்க! அல்லது கெடுக! அரசுமுறை செய்க! களவு இல்லாகுக! நன்றுபெரிது சிறக்க! தீது இல்லாகுக! மாரி வாய்க்க! வளம்கனி சிறக்க!

நெய்தல்

தாய்க்கு உரைத்த பத்து

பூப் போல் உண்கண் மரீஇய நோய்க்கு மருந்து ஆகிய கொண்கண் தேரே!

துன்புறு துயரம் நீங்க இன்புற இசைக்கும் அவர்தேர் மணிக் குரலே!