பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

تم ه ق ‘V111. நிலவின் சின்னத்தனத்தை வஞ்சகர் செயலுக்கு ஒப்பிட் டுள்ள புதுமையைப் போகவில்லை என்னும் தலைப்பில் காணலாம். இயற்கை அன்னையின் படப்பிடிப்பு, கவிஞர்க்குத் தனிச் சொத்தென்றே கூறிவிடலாம். - மணமான புதுப் பெண்ணைப் புரட்சியுள்ளம் கொள்ளச் செய்வதும், அன்றும் இன்றும் எனக் காலத்தைச் சுட்டிச் சிந்திக்க வைப்பதும் நனிசிறந்து மிளிர்கின்றன. கிள்ளேவிடு தூது முறையில் பறந்து செல்வாய் கிளியே என்ற பாட்டுச் சுவையூட்டுகின் றது. . - குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக எடுத்தாண்ட முதற் கவிஞர் வாணிதாசரே என்ருல், அது மிகையாகாது. கவிஞர் தாம் சொல்ல விரும்பியதை அப்படியே பச்சை யாகச் சொல்லாமல் அழகு தோன்ற இடக்கரடக்கலுறுகஞயம்பட உரைக்கும் தன்மை கற்பவர் உளத்தில் கழிபே ருவகை ஊட்டுவதாகும். . . கொண்ட நோய்க்கு மருந்து அண்டையில் இருக்கக் கொட்டிப் பொருளிழந் தெட்டித் திரிவதோ? "மூசாத இருமொக்கும் மூசிய ஒருமொக்கும் - முகாத்த குளத்தருகிற் களத்து வந்தேன் நான்! வேரிற் பழுத்தபலா வீணே அழியுமுன்பு விருந்திற்கிங் கேற்பாடு செய்யென்று சொல்சென்று! "தொந்த இடையைச் சாய்ந்து தந்தங்கள் பார்க்க . நூறுமுறை பாயும் வேல்விழி உயிர்போக்க ! . காயும் முழுநிலவில் காற்ருடும் மாடியில் . வாயில்லை என்னிடை வம்புத்தனம் பட்டதை' என வரும் அடிகள் மேற்கூறியதற்குத் தகுந்த எடுத்துக் காட்டுகளாகும். . . . . . . . . . . ; ' ' - - ஆகமும் புறமும் இந்நூல் முழுவதும் வெற்றி நடை போட்டுச் செல்வதைக் காணலாம். படித்துப் ப்யனுறுக! இதனே எங்கள் வழி வெளியிட உரிமையளித்த கவிஞர்க்கும், நன்முறையில் அச்சிட்டு விற்பனை உரிமை ஏற்றுள்ள மனேன்மணி புத்தக நிலையத்தார்க்கும் நன்றி!. -ஐயை பதிப்பகத்தார்.