பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 பாட்டுப் பிறக்குமடா! பாரதி தாசனின் பெயரை உரைத்திடப் பாட்டுப் பிறக்குமடா!-எங்கள் வார்புனற் காவிரி ஆற்றினைப் போல வளஞ் செய்தான்: தமிழகம் உளம் வைத்தான் புரட்சித்தி! எளிய நடையில் தமிழ்ச்சுளையைப் பிழிந்தெடுத்தே இடையிடையே நகைத்தேனேக் கூட்டிக் குழைத்தே எளியவரும், அறிவில் முதியவரும் உண்ண - ஏடெழுதிக் கொடுத்தான் ஈடுமிணையு மற்ருன்! தமிழைத் தடுப்பவள் தாயா ஞலும் - தலையை நறுக்கென்னும் மலைநிகர் தோளான்! இமியும் கலங்காமல், எதிர்ப்புக்குச் சாயாமல் எண்ணியதை உரைக்கும் அண்ணல் புரட்சிக்கவி! வாழ்வே தமிழின் வளமெனக் கொண்டான்! வணங்கிப் பிழைப்பதை நஞ்சென விண்டான்! குழுந் தமிழர் நலம்ஒன்றே வீசும் - சூரு வளியிலும் உயிரென்றே கொண்டான்! வாழ்க தமிழர் வளமலி நாடு! வாழ்க தமிழர் இனம்புக ழோடு! வாழ்கபாரதிதாசன் எங்கள் புரட்சிக்கவி வளமிக்க தமிழ்போல நலமிக்கு நீடுழி! 1