பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B ه Vil பொருள்வயின் பிரிந்த தலைவனே எண்ணி இரங்கும் தலைவி, வாழப் பொருள்தேவை அறிவிலார் நீதி!' பெர்ன்னல்ல வாழ்க்கைக்கு வேண்டிய துள்ளம்' என வரும் அடிகள், ஒன்றினர் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ சென்ற இளமை தரற்கு என்னும் கலித்தொகைப் பாட்டை நினைவூட்டக் காணலாம். பேசாத ஒவியமோ?', "ஊமையோ? இல்லை! இல்லை! என வரும் பாடலில் உவமையழகு மிளிருவதைக் கண்டு மகிழ்க! 'கேட்டாயோ செய்தி என்னும் தலைப்பில் வ்ரும் பாட்டு, கணவன் பழியைத் துாற்ருத குலமகளின் பெருங் குணத்தை எடுத்துக்காட்டும் பெற்றியையும், அவன் திருந்தி வாழவேண்டும் என்பதில் அவளுக்குள்ள பேரக்கறையையும் புலப்படுத்துகின்றது. . . தலைவன் மணந்துகொண்டு இல்லறம் நடத்தாமல் களவு இன்பத்திலே காலங் கடத்துகின்ருன். தலைவியின் நில்ை புணர்ந்த தாய் விழிப்படைகிருள்; அவளைக் கட்டுப்பாட் டிற்கு உள்ளாக்குகிருள். அதல்ை தலைவியின் உயிர் வேதனைப் ப்டுகிறது. அவள் தோழியை அழைத்துத் தலைவனுக்குத் தன் நிலைமையை விளக்கிக் கூறி, விருந்திற்கு இங்கு ஏற்பாடு செய்’ என்று கூறுகிருள். இவ்வாறு அவள் கூறும் மொழியில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளது என்பது எண்ணி மகிழ் தற்குரியதாகும். - 'அண்டை அயலாரிடம் அவனுற் படுத்துயரை - அப்படியே சொல்ல எப்படிப் பெண்ணுலாகும்? எனத் திரும்பச் சொல்வாயோ? என்னும் தலைப்பில் அமைந் துள்ள பாட்டு, 'உடம்பும் உயிரும் வாடியக் காலும் என்னுற்றனகொல் இவையெனின் அல்லது கிழவோன் சேர்தல் கிழத்திக் கில்லை’ என்னும் தொல்காப்பிய இலக்கண மரபையொட்டிப் பாடப்பெற்றுள்ளது என்பதைக் கற்றவர்கள் நன்கு உணர்வர். . கவிஞர் இரு பொருள் தோன்ற ஒரு சொல்லே அமைத்துப் பழந்தமிழ் இலக்கணத்திற் காணும் சிலேடை அணியை உண்ர் வைக்கும் இடங்கள் நிறைய உண்டு ஆங்காங்கே,