பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை வித்துவான் கவிஞர் வாணிதாசன் அவர்கள் குழந்தை இலக்கியம் முதலாகப் புலமைப் பாடல்கள் ஈருக இதுவரை யில் பதின்மூன்று நூல்கள் எழுதியுள்ளார்கள். அவ்வரிசையில் இவர் எழுதிய இசைப்பாட்டு தொடுவானம் என்னும் நூல் முதலாவதாகும். இசைப் பாடல்களின் வரிசையில் இந்நூல் இரண்டாவதாக வெளியிடப்படுகிறது. இந்நூலில் பாட்டுப் பிறக்குமடா முதலாக எழுபத்துமூன்று பாடல்கள் உள்ளன. அனைத்தும் தனித்தனி முக்கனி பிழிந்த சாறென இனிக்கும் தன்மையனவாகும். - - 'பாரதிதாசனின் பெயரை உரைத்திடப் பாட்டுப் பிறக்குமடா!' என்ற எடுப்பில், ஆசிரியரிடம் தாம் கொண் டுள்ள அன்பின் பெருக்கை வெளிப்படுத்தியுள்ளார். ஐயம், துணிபு, குறிப்பறிதல், ஒதற்பிரிவு, பொருள் வயிற்பிரிவு முதலிய துறைப்பாட்டு வகையில் ஆசிரியர் பாடி யுள்ளவை படித்து மகிழ்தற்குரிய வனப்புடையனவாகும். எளிய நிகழ்ச்சியையும் காட்சியையும் படம் பிடித்து உயிர் அளித்து மகிழ்விக்கும் அழகு தனிச் சிறப்பாக அமைந் துள்ளது. கட்டைச் சிறுதிண்ணை மீதமர்ந்தே-என் கருத்தெல்லாம் உன்பாற் செலுத்தி விட்டே பட்டுடற் பூனேயின் மெய்வருடிக்-கூரை பாய்ந்து வரும் அணில் பார்த்திருப்பேன்." இவ்வாறு இயற்கையை வருணித்துக் காட்டும் தன்மை நவிற்சிகள் பல காணலாம். தலைவனின் வரவு பார்த்திருக்கும் தலைவியின் நிலைமை யைச் சலித்தன கண்கள் என்னும் தலைப்பில், & - "காவல்நாய் வீட்டோரம் காதுகள் உதறும்! கதவைத் திறந்து பார்த்தே என்மனம் பதறும்! ஆவலடங்கா உள்ளம் அடுக்களே செல்லும்! அருந்த உணவெடுக்கும்! மருந்தென்று வெறுக்கும்! என்று பாடியிருக்கிருர் கவிஞர். இது பழந்தமிழ் அகப் பொருள் நூல்களில் காணும் நயத்தின் மிக்ழிக் எளிதாக்கி எல்லாரும் கற்றுணர அளித்துள்ள சிறப்பினை விளக்குவ