பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கண்டேன் | கண்டேன்! கண்டேன்! கண்டேன்!-என் கண்கள் இதற்குமுன் காணு எழிலை வண்டு பொருந்தாத் தாமரை முகமும், வண்டு பொருந்திய தாமரை விழியும் வானப் பிறையோ? கொடுவாட் கத்தியோ? மங்கையின் நுதலுக் கெதுதான் சரியோ? தேனும் கார்குழல் கார்மணம் காட்டா! செழுங்கடல் அலேயோ கருமணல் காட்டா! துடிபோல் இடையோ? ஒருபிடி இடையோ? குற்றிய லுகரத் தொலியோ? அறியேன்! நடையோ பிடியோ? மயிலோ அறியேன்! நல்ல வாத்தும் நாகும் அறிவேன்! சித்திரப் பாவையோ? இல்லை! சித்திரம் தீட்டிய ஓவியன் கற்பனைக் கைத்திறம் புத்தியில் இனிக்கும் புலவன் பாடல் பொருந்து மென்ருல் பெண்கட்கேன் ஊடல்? துறை காட்சி.