பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. புரிந்து கொண்டேனே ! கண்டு புரிந்துகொண்டேனே!-அவள் கள்ள விழிசொல்லும் உள்ளத்துக் காவியம் கொண்ட நோய்க்குமருந் தண்டையி லிருக்கக் கொட்டிப் பொருளிழந் தெட்டித் திரிவதோ? மாமலைச் சாரல் வளரும் கொடியிடை மருந்து நோய்க்கிருக்க அருந்தா திருப்பதோ? நாமலை யோம்இனிச் சூட்டுக்குச் சூடு நல்ல வயித்தியம்! இதுமுதல் ஏடு! காதல் அரிச்சுவடி கண்முதல் வீச்சாம்! கற்றுத்தெளியக் கூட்டிப் படிப்பதும் ஆச்சாம்! ஒதிப் பழகியபின் நன்னுாலைத் தொட்டே ஒன்றிய அகப்புற விலக்கியம் யாப்பேன்!* SASAJSASAAASAAA S துறை : குறிப்பறிதல்