பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ് & உன்னைத்தான் காண்கின்றேன் ! உன்னைத்தான் காண்கின்றேன்!-அன்பே! உன்னத்தான் காண்கின்றேன்! - . தென்னை மரத்தோப்பிற், சிற்ருேடை மலைக்காட்டில், என்னை மறந்தெங்கோ திரிகின்ற வயற்காட்டில் குட்டைப் புதுமலரிற் குளத்துச் சிறுமீனில், வட்ட முழுநிலவில், தவழ்ந்து வருங்காற்றில், பெட்டை வாத்துத் தோகைப் பிடிமான் இளநாகில் எட்டி எங்கோ விருக்கும் அன்பே எனதுயிரே! வண்டை விரட்டிய மலர்பார்த்த துண்டோடி? கொண்டல் விரட்டிய மலேபார்த்த துண்டோ டி? வண்ட லிடுமாற்றை விரட்டிய நீள்கடல் . கண்ட துண்டோ? பிறர்சொலத்தான் கேட்டதுண்டோ? கட்டுக் காவல் நமக்கிட்டே இருந்தாலும் எட்டுத்தொகை பத்துப் பாட்டுப்போ லிருந்தோம் நாம்! விட்டுப் பிரிந்தாய் நீ! மேலுக்கு வெளிவேடம்! விட்டுப் பிரிந்துவிண் போன நிலவுண்டோ? எத்தனைபேருனக் கென்னென்ன சொன்னலும், எத்தனை பேரெனக் கென்னென்ன சொன்னலும் புத்தம் புதுத் தமிழ்ப் பாட்டே கலித்தொகையே! தித்திக்குஞ் செந்தமிழ்த் தேனே! அகம்புறமே! 7