பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கருத்தை அழிக்குதே! காலையில் மாலையில் உன் நினைவே-என் கருத்தை அழிக்குதே! என்ன சொல்வேன்? பாலைக் கறக்க ஆள்வருவான்-துள்ளிப் பாய்ந்து வரும்பசுங் கன்றுக்குட்டி! கட்டைச் சிறு திண்ணை மீதமர்ந்தே-என் கருத்தெல்லாம் உன்பாற் செலுத்திவிட்டே பட்டுடற் பூனேயின் மெய்வருடிக்-கூரை பாய்ந்து வருமணில் பார்த்திருப்பேன்! அந்தி. மயங்கிற்றே! என்னுளம்போல்-மேல்வான் அழகெல்லாம் மங்கிடக் கண்டிருந்தேன்; பந்தியாய்க் கூட்டினைத் தேடிவரும்-புட்கள் பார்த்தேன்; விழிகள் கலங்கினவே! விண்மீன் எழுந்ததே! என்னுளம்போல்-வான் ஏங்கி வெதும்பிய கொப்புளமோ? புண்ணுன காதல் உள்ளத்திற்கா-வான் பூத்த முழுநிலா இன்பஞ் செய்யும்?