பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கூருயோ? தென்றலே. கூருயோ?-தவழ்ந்திடும் தென்றலே கூருயோ? குன்றுநிகர் தோளன் கொல்புலிப் போத்தோடே சென்றதே என்நெஞ்சம்! செயலைமறந்தேன் நான்! மாமலைத் தோப்பு மலர்க்காட்டின் ஊடேபோய்த் தேமலைத் தந்தானத் தேடிப் பிடித்துநீ பாமாலை பாடிப் பைந்தமிழ்ச் சுவைகூட்டிக் காமாலை வாடுமிக் கன்னியின் காதலை உன்னை வெறுப்பவர் உலகினில் இல்லை; கண்டாய்! தென்னை குளங்குட்டை திரிவதில் என்ன கண்டாய்? என்னை உரைப்பதில் உதவியின் இன்ப முண்டாம்! இன்னே விரைந்திடு! வாழ்த்துண்டாம்! வாழ்த்துண்டாம்! 16