பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 திரும்பச் சொல்வாயோ ? கண்டால் திரும்பச் சொல்வாயோ?-கவின் நிலவே! கண்டால் திரும்பச் சொல்வாயோ ? அண்டை அயலாரிடம் அவனற் படுந்துயரை அப்படியே சொல்ல எப்படிப் பெண்ணுலாகும்? வெள்ளிக் குழம்பின்தேக்கம் மெல்லத் தளும்பும்ஏரி மேற்கரை போய்ச்சுற்றி வந்தோமே ஊர்ச்சேரி! கள்ளன் அவன்செய்த குறும்புகள் இன்பம்! இன்பம்! கண்முன் நிழலாடி வாட்டுதே துன்பம்! துன்பம்! காயும் முழுநிலவில் காற்ருடும் மாடியில் வாயில்லை என்னிடை வம்புத்தனம் பட்டதை நீயுந்தான் பார்த்திருந்தாட்டநினைத்தாலே வெட்கம்! - வெட்கம்! நெஞ்சுக்குள் ஏங்கிஏங்கிச் சாகிறேன் நித்தம் நித்தம்! 31