பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2? காதல் காதல்! காதல்! காதல்!-எங்கும் காதல்! காதல்! காதல்! கடுந்தி மண்ணும் கடல்வான் காற்றும் கலந்த மயக்கம் உலக மெங்கும் மோதும் அலைகள், முன்னுள்ள மலைகள், முட்புதர்த் தாழை, புன்னைக் கிளைகள், தீதில் சிறுகுடி, பரதவர் இல்லம், சிறுசிறு உப்பங் கழியாம் பள்ளம்-எங்கும் பசுமலை போர்த்த பனிமலை பாராய்! பாடும் வண்டின் விருந்திசை கேளாய்! . விசும்பில் எழுந்த மலையிடைத் துரங்கும் விளைந்த தேனை விழிகண் டேங்கும்!-எங்கும் மின்னல் இடியும், வானப் பெயலும், வீரங் காட்டும் பெரும்போர்ச் செயலும், சின்ன நிலவும், தென்றற் காற்றும், செழும்புனல் ஆறும், தெளிநீர் ஊற்றும்-எங்கும் உண்ண விளக்கும் நன்செய் வயல்கள், ஒளிப்புனல் துள்ளும் அழகுக் கயல்கள், மண்ணைப பறிக்கும் நீளசெவி முயல்கள், வழிபார்த் தேங்கும்பேடையின் செயல்கள்.-எங்கும் o?