பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ் வாழ்க! வாழ்க! வாழ்கவே!-தமிழ் வாழ்க! வாழ்கவே!-மக்கள் உளமும் வாயும் இனிக்குந் தீந்தமிழ் சூழ்ந்த மொழியுள் தமிழே தாயாம்!-மண் தோன்றிய நாளே தோன்றியதாம் தமிழ்! ஆரியச் சித்திய மொழிகளுக் கெல்லாம் ஆணிவேர் நம்மருந் தமிழே! கண்டாய்! பாரினில் இதைப்போற் கன்னியாய் என்றும் பல்லாண்டு வாழ்ந்த மெர்ழியுண்டோ? சொல்வாய் இந்தா, இதைக்கேள் என்னருந் தோழா இன்றமிழ்ப் பகையெலாம் உன்னுயிர்ப் பகையாம். அந்தந்த நாடும் அந்தந்த நாட்டார் ஆளல் முறையென வாளேந்தி விட்டார்! வந்த பகைகண்டு. சொந்த மொழிமறந்து வாய்பொத்தி இருப்பதோ? வாளேந்திப் புறப்ப்டு சொந்தமாம் தமிழகம்! தாயகம்! ஆம்! ஆம்! சூரப்புலி மகனே! எழு! எழு! எழுந்திரு' 84.