பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 தமிழ் வெல்க! தமிழ் வெல்க! தமிழ் வெல்கவே!-கன்னித் தமிழ் வெல்க! தமிழ் வெல்கவே! அமிழ்தின் இனியமொழி; அன்னை யன்னையின்மொழி: அறுபத்து நான்குகலை, அகம்,புறம் தந்தமொழி! எண்ணஎண்ண இனிக்கும் இலக்கியம் மிகுந்ததே! எழுத்துச் சொல்பொருள் யாப்பணியாற் சிறந்ததே! பண்னெடு யாழ்மீட்டிப் பாட உகந்ததே! பண்பும் நிறைந்ததே அன்பை வளர்த்ததே! ஊனில், உயிரில் இன்பமூட்டி வளர்ப்பதாம் ஒண்பொருள் கல்விகேள்வி ஒழுக்கத்தைச் சேர்ப்பதாம்! வானின் உயர்ந்ததாம் கடலினும் ஆழ்ந்ததாம்! மக்கள் மனைவிநலம் மிக்கதாம் மிக்கதாம்! 35.