பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நீ வாழ்வாய்! தமிழ்தாழ நீ தாழ்ந்தாய் தம்பி!-கன்னித் தமிழ் வாழ நீ வாழ்வாய் தம்பி! தம்பி! இமியும் கலங்காதே! எதிர்ப்புக்கோ அஞ்சாதே! இன்றமிழ் ஏற்றுமே உன்னுட்டின் ஏற்றமாம்! மொழிவாழ இனம்வாழும் இனம்வாழ நாடுவாழும் முத்தமிழ்ப் பெருநாட்டின் ப்ொற்காலம் நினைத்துப்பார்: அழிவேற்ற தேன்,எதன. லென்றே சிந்தித்தால் அடைவோம்நாம் நம்நாட்டை நமக்குள்நாம் (மனமொத்தால்! காந்தளூர்ச் சாலையிற் கலங்க ளறுத்ததுண்டு! கடலினத் தாண்டிப்போய் வெற்றி யடைந்ததுண்டு! சோர்ந்தவர் அல்லர்நாம்; சூரப்புலிக் சூட்டம்! தூக்கம் தெளிந்தா விங்கே நிற்குமோ நரிக்கூட்டம்? 36