பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" அன்னே! அன்னே! அன்னட ஆடுங் கூத்தைக் காணின் மனவிருள் ஒடும். ஒடும். ஒடும் விரைந்தே பொன்னை உருக்கிக் கதிரின் வழியாய்ப் புவிவாழ் உயிரெலாம் தன்னிற மாக்கி மின்னி ஒளிரச் சிறுநகை பூத்து விதவித மலருள் குளிர்முகங் காட்டி மாலை எழிலுடைத் தொடுவான் அலேய மலே தவழ் கருமுகில் கூந்தல்வான் தவழச் சாலைக் குயில்வாய் இசையமு தீந்து சலசலத் தோடும் அருவியில் மிதந்து, குடிய மலர்கள் வான்பரப் பெங்கணும். சூழ இருள்திரை கிழித்தவள் கொளுத்தும் வாடாத் திங்கள் தண்ணுெளி அரங்கில் வளைக்கரம் சுழல்விழி நொடித்துடல் குலுக்கி கொடுநகை வானில் இடியை முழக்கும். கூர்விழிப் பார்வை உயிர்ப்பறி மின்னல் இடைநொசிந் தசையைச் சூறை பிறக்கும் இதழடிப் பெயர்ப்பில் உலகமே கலங்கும் 39