பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 அகங்கைத் தேன் தலையைத் தாழ்த்தி நாணிக் கோணிச் சாய்ந்திருப்பதும் ஏனே?-அடி! தங்க மயில் நீதானே? தனிமையிலும் இதுதானே? மலைமுகட்டினில் குறிஞ்சி நாட்டினில் வடித்துவந்த செந்தேனே!-உன் வாயிதழ் காட்டடி மானே!வண்டுபோல் மொய்த்திடு வேனே! முகத்தை மறைத்து முதுகைக் காட்டி மூடி இருப்பதும் ஏனே?-வாயை மூடி இருப்பதும் ஏனே? முல்லைக் கொடி நீதானே? அகம் படித்துப் பின் புறம் படிக்கலாம்; அச்சம் தவிரடி மானே!-எனக்(கு) ஆசைக்கொரு முத்தம் தானே! அகங்கைத் தேனடி நானே! 55