பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மாலையும் வந்தது! செங்கதிர் சென்றது; செவ்வல்லி பூத்தது; திங்களும் வந்தது பாரடி!-உன் செவ்விதழைச் சற்று நீட்டடி! மாடுகள் சென்றன; மாலேயும் வந்தது; கூடுகள் ஒய்ந்தன பாரடி!-உன் குளிர் இதழைச் சற்று நீட்டடி! செக்கர் மறைந்தது: தென்றலும் வந்தது: அக்கரை நீளோடை கேளடி!-உன் அதரத்தை ஆட்டாதே நீட்டடி! கொல்லை இருண்டது; குளிர்மை நிறைந்தது; முல்லையும் பூத்தது பாரடி!-உன் முத்துப் பல் வாயிதழ் நீட்டடி 56