பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பழக்கூடைக்காரி கூடை தூக்கிக் குலுக்கி நடக்கும் குமரி அழகுக் குமரி-தமிழ்க் குமரி அழகுக் குமரி!-அவள் குறுநகைக்கே, ஈடுசெய்யப்பூோழோ த்தி இல் செவ்வலரி! - வாடை அல்ல தென்றற் காற்று வாழ்வின் இன்ப ஊற்று!-மனத் துயரைப் போக்கும் மாற்று!-அவள் வண்டுவிழி ஆணினத்தின் உயிரைக் கொல்லும் கூற்று! கொடுங்கூற்று! மறைத்து வைத்த கொய்யாக் கனி வாடை காட்ட மயக்கும்;-உடன் வாங்க் ஆசை நிறைக்கும்!-எங்கோ வந்த செயல் மறந்து பித்தம் ஏறக் கண்கள் மறைக்கும் எண்ணம் குறைக்கும்! அறைத்த சாந்து கன்னம் குழிய ஆல்லிஇதழ் சிரிக்கும்:-முகத்தாமரை மலர் விரிக்கும்!-அவள் அழகுநெற்றி விற்புருவம் - அம்பிரண்டைத் தெறிக்கும் உளம்வெறிக்கும்! 70