பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g: பாண்டி நாட்டுத் திருப்பதிகள் செயல்களாகக் கற்பித்துக் கொண்டும், தானே ஒன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போவான் று கூறுவர் பிள்ளை உலக ஆசிரியர் இக்கருத்தினைச் சில எடுத்துக் காட்டுகளாலும் விளக்கிச் செல்வர். வேனிற்காலத்தில் உழவன் ஒருவன் தன் வயல் 2" ※ゞベ விட்டதன் காரணமாக நெடுந்தொலை துளை இட்டு நீர் இறைத்து வாய்க்கால் நீரை அனுப்புகின்றான் தன் வயலுக்கு. பாலைநிலத்தில் நெடுந்து ரம் நடந்து வரும் பாகவதர்கள் களைப்பால் அந்த உழவன் அறியாமல் வழியில் தாம் காணும் வாய்க்கால் நீரில் தங்கள் திருவடி முதலானவற்றை விளக்கி இளைப்பாறுகின்றனர். இதனை எம்பெருமான் கவனித்துக் கொண்டே இருந்து என் அடியார் விடாயைத் தீர்த்தாய்’ என்று கணக்கிட்டுக் கொள்வான். அங்ங்னமே செல்வன் ஒருவன் தனக்குச் சூது, சதுரங்கம் முதலியவை ஆடுவதற்கும், காற்றோட்டமாகத் தான் வந்து தங்கு வதற்கும் வீட்டின் புறத்தில் திண்ணை கட்டி வைக்கின்றான். மழையில் நனைந்து வரும் சில பாகவதர்கள் அத் திண்ணையில் ஒதுங்கியிருந்து போகின்றனர். இதனை எம்பெருமான் விழிப்புடன் கவனித்து என் அடியார்க்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்' என்று அவர்கள் அறியா திருந்தும் தானே ஏறிட்டிக் கணக்கிட்டுக் கொள்வான். இவ்வாறு கொள்வதை யாத்ருச்சிகமாகக் கொள்வதாக அந்த ஆசிரியர் குறிப்பர். ஒருவன் மற்றொருவனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பேச்சுவாக்கில் கோயில், திருமலை, திருவள்ளூர், திருவல்லிக்கேணி என்று தான் சென்று வந்த ஊரைப் பற்றிக் கூறுகின்றான். இதனைக் கவனித்திருக்கும் எம்பெருமான் அவன் கூறியதனையே பற்றாசாகக்கொண்டு 1. யாத்ருச்சிகம்.யாரோ ஒருவருடைய இச்சையில் உண்டாவது.