பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாலிருஞ்சோலை வள்ளல் కిg என் ஊரைச் சொன்னாய்’ என்று கணக்கிட்டுக் கொள் வான் ஒருவன் எதையோ பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய பேச்சில் பேசிக் கொண்டிருக்கும் பொருளை யொட்டி அவர் இவர் என்று சில பெயர்களைச் சொல்ல, அப்பெயர்களில் இறைவன் திருப்பெயர்களில் ஒன்றிரண்டு அமைந்துவிட்டால் அதனைக் கொண்டே என் பெயரைச் சொன்னாய்’ என்றும் ஏறிட்டுக் கொள்வான் எம்பெ மான். இம் மாதிரியாகக் கொள்வதை பிராசங்கிக மாகக் கொள்வது என்று குறிப்பிடுவர் இந்த ஆசிரியர். பாகவதர்கள் சிலர் திவ்விய தேச யாத்திரையின் பொருட்டு ஒருகாட்டின் வழியாகச் செல்லுகின்றனர், அவர்களை வருத்தி அவர்கள் கையிலுள்ளவற்றைப் பறிப்பதற்காகச் சில வழிப்பறிக்காரர்கள் அவர்களைப்பின் தொடர்கின்றனர். இந்தக் கொள்ளை க்காரர்கடகுப் பின்னால் தன் காரியமாகப் போகும் சேவகன் தனக்கு முன்னால் செல்பவர்களைப் பற்றிச் சிறிதும் அறியாமல் போய்க் கொண்டிருக்கின்றான். கொள்ளைக்காரர்கள் பாக வதர்களைப் பாதுகாப்பதற்காகவே சேவகன் தம்மைப் பின் தொடர்கின்றான் எனக் கருதி அஞ்சி அப்பாகவதர் களைப் பறியா தொழிகின்றனர். இக்காரணம் பற்றி எம்பெருமான் அந்தச் சேவகனை 'என் அடியாரை நோக்கினாய்’ என்று ஏறிட்டுக் கொள்வான். இம் மாதிரியாகக் கொள்வதை ஆதுவிங்கிகம்’ என்று கூறுவர் இந்த ஆசிரியர். இங்ங்னம் எம்பெருமான் மடிமாங்காயிட்டு ஆன்மாக்களை உய்விக்கும் பெருங்கருணையை நினைந்த 2. பிராசங்கிகம் - பிரசங்கத்திலே உண்டாவது, பிரசங்கமாவது-புத்திக்கு விஷயமானவற்றைவிட முடியாம லிருப்பது. 3. ஆநுசிங்கிகம்.அநுசங்கத்திலே உண்டாவது. அதுசங்கமாவது, பின்னால் உண்டாகும் சம்பந்தம்.