பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌4 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் வண்ணம் அழகர் கோயில்' என்று வழங்கும் திருமா விருஞ்சோலை என்ற திவ்விய தேசத்தைச் சேவிக்கச் சித்தமாகின்றோம். அதிகாலையில் நன்னிராடி தூய ஆடையணிந்து நாம் தங்கியிருக்கும் மங்கம்மாள் சத்திரத் தினின்றும் பேருந்து நிலையம் வருகின்றோம். அழகர் கோயில்’ என்ற பெயர்ப் பலகையைத் தாங்கியிருக்கும் பேருந்தில் ஏறி உட்கார்ந்த அளவில் திருமாலிருஞ் சோலை நம் மனத்தில் இடம் பெறுகின்றது. நம்மாழ் வாரின் பாசுரம் ஒன்று நம் மனத்தில் குமிழியிடத் தொடங்குகின்றது. 'திருமாலி ருஞ்சோலை கலைஎன்றேன்; என்ன, திருமால்வங் தென்னெஞ்சு கிறையப் புகுந்தான்' என்ற திருப்பேர் நகர் பாசுரத்தின் முதல் இரண்டு அடிகளைச் சிந்திக்கின்றோம். நம்மாழ்வார் கொக்குமலை, குருவிமலை, கழுகுமலை என்ற பல மலைகளையும், சொல்லிப் போகின்றபோக்கில் திருமாலிருஞ் சோலைமலை என்ற மலையின் பெயர் யாத்ருச்சிகமாக வெளிவருகின்றது. ஏனைய மலைகளைவிட இம்மலைக்கு ஒரு சிறப்புண்டு என்ற அறிவுடன் சொன்னாரல்லர். இதனையே பற்றா சாகக் கொண்டு எம்பெருமான் பெரிய பிராட்டி யாருடன் கூட வந்து அவர்தம் நெஞ்சு நிறையப் புகுந்து கொள்கின்றான். நினையாது சொன்னவற்றையும் நினைத்துச் சொன்னதாக்கிக் கொடுக்க வல்லவளான பிராட்டி அருகில் இருப்பதனால் மலையைப் பற்றின ஆழ்வாரின் வாக்கு எம்பெருமானுக்கு மலையாகவே (பெரிதாகவே) ஆய்விடுகின்றது. எம்பெருமானுக்கு 'நீர் வண்ணன்' என்றொரு திருநாமம் உண்டல்லவா? மிகச் சிறு துவாரம் இருப்பினும் நீர் உள்ளே புகுந்து நிறைந்து விடுவதைப் போலவே நீர் வண்ணனான 4. திருவாய் 10.8 : 1.