பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix அருமையை அநுபவிக்கின்றோம். ‘மாயனை - மன்னு வடமதுரை மைந்தனை-துளய பெரு நீர் யமுனைத் துறைவனை-வாயினால் பாடி-மனத்தினால் சிந்தித்துஅறிவொன்று மில்லாத ஆயர்குலத்துப் பெண்களின்’ நிலையிலிருந்து அநுபவித்த ஆண்டாளின் அருள் வெள்ளத்திலே கும்மாளம் அடித்து விட்டு திருத்தண்காலூர் சென்று அப்பனைத் தரிசிக்கின்றோம். இதுவோ திருகரி ஈதோ பொருநை? இதுவோ பரம பதத்து எல்லை-இதுவோதான், வேதம் பகர்ந்திட்ட மெய்ப் பொருளின் உட் பொருளை, ஒதும் சடகோபன் ஊர்? என்று நம்மை மறந்து ஆழ்வார் திருநகரிலேயே நின்று விடுகின்றோம். வானுற வளர்ந்து விளங்கிய திவ்வியமான பேரொளியைக் கண்டு நம்மாழ்வாரைத் தெரிந்து கொண்டு தனது குருவாக ஏற்றுக் கொண்ட மதுரகவி பிறந்த மண்ணிலே- திருக்கோளூரிலே வைத்தமா நிதியைக் கண்டு மகிழ்கின்றோம். சிறுவர்களின் விளையாட்டின் சுவையிலே ஈடுபட ஆசைப்பட்டு அங்கிருந்த பெரிய திருவடியை சற்றே நகர்ந்திடு, கருடா என்று கூறிய மகர நெடுங்குழைக் காதனின் விளையாட்டு ஆசையை எண்ணி வியக்கின்றோம். குழகன்' என்றால் மகானாக இருக்கும் தனது மேன்மையினைப் பாராது சிறியாரோடும் கலந்து பழகுபவன் என்று பொருள் சொல்லும் பேராசிரியர் சுப்புரெட்டியார் நாம் அப் பொருளில் உணர்ந்து உருகி 'அவன் அழகையும் அருளையும் பருகும் வகையில் அப் பேரருளாளனின் பெருமையனைத்தையும் உணர்த்தி விடுகின்றார். கீதையின் பதினெட்டு அத்தியாயங்கள் பதினெட்டு யோகங்களைச் சொல்வது போல இவர்தம் பதினெட்டுக் கட்டுரைகளும் பல்வேறு பக்தித் திருப்பதிகளின் பெருமை களை விளக்குகின்றன. திருமந்திரத்தின் பெருமையை. நலந்தரும் சொல்லை -பரத்துவம், வியூகம், விபவம்,