பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லிபுத்துர் வேயர் பயந்த விளக்கு #23 பல திருமொழிகளை அருளிச் செய்திருந்தாலும் இந்த ஊரைப் பற்றிப் ப: டிய பாசுரங்கள் இரண்டேதாம். கண்ணனாகிய குழந்தையைத் தாய்ப்பால் உண்ண தாய் நிலையிலிருந்து அழைக்கும் பெரியாழ்வார், பின் அனைய துண்இடையார் விரிகுழல்மேல் துழைந்தவண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்துர் இனிது.அகிர்ந்தாய் உன்னைக்கண்டார் என்னகோன்பு கோற்றாள் கொலோ இவனைப்பேற்த வயிறு டையான் என்னும் வார்த்தை எய்துவித்த இருடிகேசன முலை உணயே.' என்று பாடுகின்றார். அவருடைய அருமைத் திருமகள் ஆண்டாளோ காதலி நிலையிலிருந்து கொண்டு கண்ணனைத் தன்னிடம் வருமாறு குயிலைக் கூவும்படி வேண்டுகின்றாள். 'மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத் துருறை வான்றன் பொன்னடி காண்பதோ ராசையி னால்என் பொருகவற் கண்ணினை துஞ்சா, இன்னடி சிலொடு பாலமு துண்ட்டி எடுத்த என்கோலக் கிளியை உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே! உலகளந் தான்வரக் கூவாய்.' (பரந்து-எங்கும்பரவி; கண் இணை-இரண்டு கண்கள்; இன் அடிசில்-கன்னல் அமுது; கோலம்-அழகியர் என்பது பாசுரம். இந்த இரண்டு பாசுரங்களிலும் வில்லிபுத் தூரின் இயற்கைச் சூழ்நிலை காட்டப் பெற்றுள்ளது. இந்த இருவரைத் தவிர ஏனைய ஆழ்வார்கள் வில்லிபுத்துளர் 23. பெரிாழ். திரு. 2.2:6 . 24. நாச். திரு. 5.5 . பள். தி-9