பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் இருப்பூர்தி- மூலமும் இவ்வூரை வந்தடையலாம். நாம் அதிகாலையில் நன்னீராடி நல்லுடை உடுத்து எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகத்தார் அன்புடன் அனுப்பிய சிற்றுத்தில் (Van) புறப்படுகின்றோம், முக்கால்மணி நேரத்தில் திருநகரியை வந்தடைகின்றோம். ஊரை நெருங்க நெருங்க அவ்வூர்ச் சூழ்நிலையும் வளமும் நம் கண்ணில் படுகின்றன. ஆற்றுநீர் பாயும் இடமாதலால் நெல் வயல்களும் சோலைகளும் நமக்குக் காட்சியளிக்கின்றன. மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர்' சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர்,' "கொக்கு அலர் தடம் தாழைவேலித் திருக்குருகூர்', வளங்கொள் தண்பனை குழ்ந்து அழகு ஆய திருக்குருக்கூர்,' செறுவில் செந்நெல் கரும்பொடு ஒங்கு திருக்குருகூர்”என்று ஆழ்வார் பாசுரங் களில் குறிப்பிடப் பெறும் வளத்தையும், அவ்வளம் இன்றும் நின்று நிலவுவதையும் கண்டு மகிழ்கின்றோம். நம் வண்டியைச் சாலையின் ஓர் ஒதுக்குப் புறத்தில் நிறுத்தி விட்டு ஊரின்மீது நம் பார்வையைச் செலுத்துகின்றோம். ஊர் சற்றுப் பெரிய ஊரே. நகர்களில் உள்ளவாறு போல மிகப் பெரிய கட்டடங்கள் ஒன்றும் இல்லை. நம்மாழ்வார் காலத்தில் ஒன்றிரண்டு இருந்திருக்கலாம். குன்றம் போல் மணி மாட நீடு திருக்குருகூர்” மாடமாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்', 'தேசமாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர்' என்ற நம்மாழ்வாரின் 4. திருவாய். 4. 10:5 , ఓష్ఠ క్షీ, 4, 10:6 6. டிை 4. 10:8 கொக்கு அலர்-கொக்குபோல் வெண்ணிறமாக அலரும் 7. டிை 4, 10 : தண்பனை-குளிர்ந்த நீர்நிலங்கள் 8. டிை 4. 10:10 செறு-விளை நிலம். 9. திருவாய், 4. 10:1 10, 64 4. 10:2 11, 64.4. 10: 8