பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் i58 |கபாலம்-நான்முகனின் மண்டையோடு; மோக்கம் விடுபடுதல்.) என்பது ஆழ்வார் திருவாக்கு ஒரு காலத்தில் சிவன் தன்னைப் போலவே பிரமனும் ஐந்து தலையுடையனா யிருப்பது பலரும் பார்த்து மயங்குவதற்கு இடமாயிருக்கிற தென்று கருதி அவனது தலையொன்றினைக் கிள்ளி எடுக்கின்றான். அத்தலை அப்படியே சிவன் கையில் ஒட்டிக்கொண்டுவிடுகின்றது. என்ன செய்வது என்றறி யாமல் கவலைப்படுகின்றான் சிவன். தேவர்களும் முனிவர் களும் இப்பாவம் தொலையப் பிச்சை எடுக்கவேண்டும்; என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றுதான் அது கையைவிட்டு அகலும்’ என்று கூறுகின்றனர். அதன்படியே அவனும் பல தலங்களில் பிச்சையேற்று அலைந்து திரிகின்றான். என்றபோதிலும் அது நீங்கிற்றிலது. பின்பு ஒரு நாள் பதரிகாசிரமத்தை அடைந்து அங்கு எழுந்தருளி யிருக்கும் நாராயண மூர்த்தியை வணங்கி வருந்தி, இரக்கின்றான். அப்பெருமானும் அட்சயம் என்று சொல்லிப் பிச்சையிடுகின்றான். உடனே கபாலம் நிறைந்து அதுவும் கையைவிட்டு நீங்குகின்றது என்பது கபாலமோக்க வரலாறு. இவ்விடத்தித்தில் இன்சுவைமிக்க நம்பிள்ளை ஈடு: 'நீங்கள் ஈச்வரர்களாக சங்கித்தவர்களிருவரும் நின்ற நிலை கண்டதே; ஒருவன் தலைகெட்டு நின்றான்; ஒரு வன் ஒடுகொண்டு பிராயச்சித்தியாய் நின்றான். ஒட்டை யோடத்தோடு ஒழுகலோடமாய், உங்கள் குறைதீரப் பற்றுகிற நீங்கள் உங்களிலும் பெருங்குறையாளரையோ பற்றுவது? பாதகியாய் பிட்சைபுக்குத் திரிந்தான்’ என்று நீங்களே சொல்லிவைத்து அவனுக்குப் பரத்துவத்தைச் சொல்லவோ? ஒருவனுடைய ஈசுவரத்துவம் தலையோடே போயிற்று. மற்றவனுடைய ஈச்வரத்துவம் அவன் கையோடே யென்று காட்டிக் கொடுக்கின்றார். (கண்டு கொண்மின்) உந்தம் அகங்களிலே நீங்கள் எழுதியிட்டு