பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் வைத்த கிரந்தங்களைப் பார்த்துக்கொள்ள மாட்டி கோளோ? முன்னே நின்று பிதற்றாதே என்கிறார்.: இங்ங்ணம் அநுமானத்தையே பிரமாணமாகக் கொண்டவர். களை' மறுத்துத் தள்ளுவதை எண்ணுகின்றோம். அடுத்து, ஆகமத்தைப் பிரமாணமாகக் கொண்ட வர்களை மறுக்கும் திறத்தைச் சிந்திக்கின்றோம். இவர் கள் இலிங்கியர், சமணர், பெளத்தர், விதண்டாவாதம் செய்யும் வைசேடிகர்கள் முதலியோர். நீங்களும், நீங்கள் வணங்குகின்ற தெய்வங்களும் ஆகிநின்றவன் திருக்குருகூரில் எழுந்தருளியிருக்கும் பொலிந்து நின்ற பிரானே' யாவன். அவனையே துதிசெய்யுங்கோள்' என்று கூறுவதையும் சிந்திக்கின்றோம். அடுத்து, 'நாராயணனே பரம்பொருளாயின் அவன் தன்னைப் போற்றும்படி செய்யாமல் இதர தெய்வங்களைத் தொழுமாறு எங்களைச் செய்தது ஏன்? என்று சிலர் வினவுவதாக நினைத்து ஆழ்வார் அவர்கட்கு மறுமாற்றம் அளிக்கின்றார் அடுத்த பாசுரத்தில். போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உண்மையின்னே தேற்றி வைத்த தெல்லீரும் வீடுபெற் றால் உலகு இல்லையென்றே, ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர்.அது அறிந்தறிங் தோடுமினே' (பேணுதல்-ஆதரித்தல்; புறத்திடுதல்-வேறுபடுத்துதல், தேற்றுதல்-நம்புதல்; உலகு-சாத்திரமரியாதை.) என்பது பாசுரம், இதில் எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை' என்ற தொடர் சற்று மயக்கத்தைத்தருவதாகும். 17. இவர்கள் பாசுபத நையாயிக வைசேடிகர்கள். 18. இலிங்கியர்-இலிங்கவாதிகள்; லிங்கம்-ஹேது; அது மானம். 19. திருவாய் 4 10:5 20. டிை - 4. 10: பரமபதத்திலிருப்பதைவிட இங்கே திருக்குணங்கள் நன்கு விளங்க்ப்பெற்றதனால் இப்பெயர் பேற்றார்.