பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேரெயில் மகரநெடுங் குழைக்காதன் 181 'கொடுத்துக் கொள்ளதே. கொண்டதற்குக் கைக்கூலி கொடுக்க வேணும்.” என்பதால் அந்தப் படியைக் காட்டுகின்றார். தன் கை ஏலாது அவனைக் கை ஏற்கப் பண்ணுதல் மட்டிலும் போதாது. தான் கொடுத்த தனை அவன் ஏற்றுக் கொண்ட தற்குப் பிரதி உபகாரமும் செய்ய வேண்டும் என்பது இதன் கருத்து. இதனைத் திருப்பாவைச் செல்வியாரின் செயலால் தெளிவாக்கலாம். திருமாலிருஞ் சோலை நம்பிக்கு நூறு தடாவில் அக்கார அடி சிலையும் நூறு தடாவில் வெண்ணெ யையும் நிறைத்து வைக்கின்றார். இவற்றை ஏற்றுக் கொள்ளு மாறு அழகரை இறைஞ்சுகின்றார் அன்னையார். இக் கைங் கரியத்துடன் நிற்கமனமில்லாதவர், 'இன்றுவந்து இத்தனை பும் அ முதுசெய்திடப் பெறில், கான் ஒன்று.நூ றாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும்செய்வன் தென்றல் மனங்கமழும் திருமாலிருஞ் சோலை தன்னுள் கின்றபிரான் அடியேன்மனத் தேவந்து கேர்படிலே.' என்று பகர்கின்றார் . இவற்றை அமுது செய்து அடியாள் இதயற்தில் வந்து தங்கின், இன்னும் நூறாயிரம் தடாக்கள் வெண்ணெயும் அக்கார அடிசிலும் தருவேன். அத்துடன் நின்று விடுவேனோ? இல்லை, இல்லை, ஆழ்வாரைப் போன்று உமக்கு என்றும் எல்லாவிதக் கைங்கரியங் களையும் புரிவேன்' என்கின்றார் இப் பாசுரத்தில். வேறு பயனொன்றையும் கருதாமல் கைங்கரி யத்தையே பலனாகக் கொண்டு செயலாற்றியவர்கள் 5. நீ வசனபூஷ-289. 5. நாச். திரு 9:7.