பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் வைணவ உலகத்தில் உள்ளனர். அன்புடனும் ஆதரத் துடனும் கண் ண னு க்கு அமுது படைத்து மகிழ்ந்த விதுரர், கண் ண னு க்கும் பலராமனுக்கும் அணிந்து கொள்ள மலர் மாலை கொடுத்த மாலாகாரர், கண் ண னுக்குப் பூசிக் கொள்ளுவதற்காக சந்தனம் கொடுத்த கூனி ஆகியோர் இவர்கள். இவர்களை வைணவ உலகம் நினைந்து போற்று கின்றது. இந்த எண்ணங்கள் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் திருப்பேரெயில் என்ற திவ்விய தேசத்தை நோக்கி வருகின்றோம். அங்கனம் வருங்கால் ஊரின் பெயரைப் பற்றி நம் மனம் ஆராயத் தொடங்குகின்றது. இத் திருத்தலம் நெல்லை. திருச்செந்து ர் நெடுஞ்சாலையில் உள்ள து;ஆழ்வார் திருநகரியிலிருந்து மூன்று கல்தொலைவி ஆ. ஸ் எ து, தன் பொரு ைந யாற்றி ன் தென் கரையிலுள்ள இத்த ைம் நவ திருப்பதிகளுள் ஐந்தாவது நம்மாழ்வார் மட்டி லும் ஒரு பதிகத்தால் இத் திருப்பதி எம்பெருமானை பங்கள் ச | ச ைம் செய்துள்ளார். கண் ண னாகவே கருதி ஈடுபட டு பேசுகின்றார். சில பதிப்புகளிலுள்ள இத் திருவாய் மொழிப் பாசுரங்களில் பாசுரந்தோறும் தென் திருப்பேரை' என் மு பதிப்பித்திருக்கக் காண்கின்றோம். இத் திருவாய் மொழி யின் ஒன்பதாவது பாசுரத்தில் தென் திருப்பேரெயில் மாநகரே என்று அருளிச் செய்யப்பெற்றிருப்பதாலும், வியாக்கியானத்தில், திருப்பேரெயிலாகின்ற மாநகரிலே’ என்று தெளிவாக அருளிச் செய்யப்பெற்றிருப்பதாலும் ஆழ்வார் திருவுள்ளத்தில் திருப்பேரெயில்’ என்ற பெயரே' நிலை பெற்றிருத்தல் வேண்டும். இத்திருவாய் மொழியின் ஐந்து, ஆறு, ஏழாம் பாசுரங்களில் பேரெயிற்கே என்று மூலம் அமைந்திருந்தும் சிலர் பேரையிற்கே என்று பதிப்பித்திருப்பது தவறு. பேரை' என்பது தலத்தின் திருநாமமாயின் அதனுடன் வேற்றுமை உருபு சேருங்கால் பேரைக்கு' என்றாகுமேயன்றி இன் சாரியை வந்து பேரையிற்கு என்று ஆகாது. ஐகாரiற்றதான சொல்லின்